அமெரிக்கா, தலிபான்கள், ஆப்கானிஸ்தான்: எதிர்காலம் இவர்களுக்கு எப்படி அமையப்போகிறது? – மொழியாக்கம்: ஜெயந்திரன்

ஆப்கான் எதிர்காலம் இவர்களுக்கு எப்படி அமையப்போகிறது?

ஆப்கான் எதிர்காலம் இவர்களுக்கு எப்படி அமையப்போகிறது? அமெரிக்கா தலிபான்கள் ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் இதுவரை நடைபெற்று வந்த போரும் ஆக்கிரமிப்பும் ஒரு முடிவுக்கு வந்து, ஆப்கானிஸ்தான் இறுதியாக அமைதியான நிலைக்குத் திரும்புகின்ற இத்தருணத்தில், ஆப்கான் தேசத்தின் எதிர்காலம் எப்படியிருக்கப் போகின்றது என்றோ, அல்லது இப்போரின் முக்கிய பங்காளிகளான அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் எதிர்காலம் எப்படி இருக்கப் போகின்றது என்றோ எந்த ஒரு தெளிவும் அற்ற நிலையே தற்போது காணப் படுகின்றது.

இவர்களது உத்தியோக பூர்வ அறிக்கைகளைப் பார்க்கும் போது, இருபது வருடங்கள் நீடித்த மோதல்களைத் தொடர்ந்து இருபது வருடங்களாக நடைபெற்ற போரின் காரணமாக அழிவுப் பாதாளத்தினுள் ஆப்கான் தேசம் தள்ளப் பட்டிருப்பதன் காரணத்தினால், இருதரப்புகளும் தமது நிலைப்பாடுகளை மிதமாக்கி, தமது எதிர்பார்ப்பு க்களைக் குறைத்து, தமது இலக்குகளை மட்டுப்படுத்தி யிருக்கின்றன.

ஆப்கான் எதிர்காலம் இவர்களுக்கு எப்படி அமையப்போகிறது?இப்படிப்பட்ட ஒரு அவமானகரமான தோல்வியை அமெரிக்கா தழுவியிருந்த போதிலும், “வோஷிங்டன் முன்னெடுத்த மிக நீண்டகாலப் போரை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து, அமெரிக்கா மற்றும் நேற்றோத் துருப்புகளை விலக்கியிருப்பது மிகவும் சரியான முடிவு” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தி வந்திருக்கிறார்.

தமக்காகப் போரிடுவதற்கு எந்தவித விருப்பமில்லாதவர்களுக்காகவோ அல்லது காபூலில் அமெரிக்கா நிலைநிறுத்திய வெளிப்படையாகவே ஊழல்கள் நிறைந்த ஒரு அரசுக்காகவோ அமெரிக்கர்கள் போரிட்டு இறக்கவேண்டிய அவசியமில்லை என்று அவர் வாதிடுகிறார். அது நியாயமானது தான்.

ஒரு விடயத்தை ஒருபோதுமே செய்யாமல் இருப்பதை விட காலம் தாமதித்துச் செய்வது சிறப்பானது தான்.

“எல்லா விடயங்களையும் செய்து பார்த்த பின் அமெரிக்கர்கள் கடைசியாகச் சரியான விடயத்தைச் செய்வார்கள் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம்”; என்று வின்ஸ்டன் சேர்ச்சில் சொல்லியிருக்கிறார். ஆனால் எல்லா நேரங்களிலும் அப்படியில்லை.

அமெரிக்க – ஆப்கான் சாவு அரங்கில் தற்போது திரை இழுத்து மூடப் பட்டிருக்கின்ற இந்த நேரத்தில் இரண்டு தசாப்தங்கள் நீடித்த போர் மற்றும் ஆக்கிரமிப்பு என்பவற் றிலிருந்து வோஷிங்டன் எப்படிப்பட்ட பாடங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறது?

ஆப்கான் எதிர்காலம் இவர்களுக்கு எப்படி அமையப்போகிறது?இந்த மாதத்தின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட மிகக் காத்திரமான அறிக்கையில் ஆப்கானில் மூலோபாயம், திட்டமிடல். உரிய நேரத்தில் கருமமாற்றல், நிதியைச் செலவிடுதல், மேற்பார்வை செய்தல் போன்ற அனைத்து விடயங்களிலும் அமெரிக்கா ஏன், எப்படித் தவறு செய்தது என்பதை ஆப்கானுக்கான பென்ரகனின் அதியுயர் ஆய்வாளர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

கற்றுக்கொண்ட பாடங்கள்

அறிக்கையில் முன்வைக்கப்பட்ட ‘கற்றுக்கொண்ட பாடங்கள்’ அனைத்துமே நடைமுறை ரீதியிலானவை. அடுத்த செயற்பாடு அல்லது அடுத்த போருக்கே அவை உதவும். வியட்நாமிலே அமெரிக்கா பாடங்களைக் கற்றுக் கொள்ளத் தவறி யிருந்தால், இன்னொரு வெளி நாட்டுத் தலையீட்டுக்கு முன்னர் ஆப்கானிஸ் தானிலிருந்து அமெரிக்கா நிச்சயமாகப் பாடம் கற்றுக் கொண்டாக வேண்டும்.

அப்படிப் பார்க்கும் போது, எல்லாவற்றையும் விட மிக முக்கியமான ஒரு விடயத்தை நாம் தவறவிட்டுவிடலாம். அதாவது இங்கே கற்றுக் கொள்ளப்பட்ட முக்கியமான பாடம் என்னவென்றால் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட போர்கள்” எச்சந்தர்ப்பத்திலும் என்ன விலை கொடுத்தும் தவிர்க்கப்பட்டாக வேண்டும்.

ஆப்கான் எதிர்காலம் இவர்களுக்கு எப்படி அமையப்போகிறது?அமெரிக்கர்களைப் பொறுத்த வரையில் அதிட்டவசமாக வோஷிங்டன் முன்னெடுக்கும் போர்களில் மக்கள் இளைத்துக் களைத்து விட்டார்கள். ஆப்கானிலிருந்து படைகளை அமெரிக்கா விலக்கியதை கிட்டத்தட்ட 70 வீதமான அமெரிக்கர்கள் முழுமையாக ஆதரிக்கிறார்கள். உண்மையில் காபூலில் கடந்த வாரம் நடந்தேறிய அவமானகரமான காட்சிகள், அமெரிக்கா எதிர் காலத்தில் பூகோள ரீதியிலான போர்களை முன்னெடுக்கும் பட்சத்தில் அமெரிக்க மக்கள் அம் முயற்சிகளை நிச்சயம் எதிர்ப்பார்கள் என நம்பலாம்.

இதே போல, எல்லா வளங்களையும் அழித்தொழிக்கின்ற, இப்படிப்பட்ட அதிக செலவினத்தை ஏற்படுத்துகின்ற மத்திய கிழக்குப் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் போர்கள், ஒரு புறம் 6.4 ட்ரில்லியன் டொலர்கள் பெறுமதியான மிகப் பாரிய பொருண்மியச் செலவுக்குக் காரணமாகின்றது என்பது மட்டுமன்றி, குறிப்பாக மூலோபாய ரீதியாக அவர்களது போட்டியாளர்களாகிய சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் தொடர்பாக உலகத்தில் அமெரிக்காவுக்கு இருக்கின்ற செல்வாக்கையும் ஆழமாகப் பாதிக்கின்றன என்ற முடிவுக்கு வோஷிங்டனின் வெளியுறவுக்கொள்கை நிறுவனங்கள் தற்போது வந்திருக்கின்றன.

மிகவும் கவலைக்குரிய ஒரு விடயமாக இருப்பினும், ஆப்கானில் அமெரிக்க சந்தித்த இந்தத் தோல்வி, உலகம் முழுவதும் கேலிக்குரியதொரு விடயமாக மாறிவிட்டது. “நீங்கள் பயனற்றவர்கள் என்ற உணர்வு உங்களுக்கு ஏற்பட்டால், தலிபான்களை அகற்றி மீண்டும் அந்தத் தலிபான்களை ஆட்சியில் அமர்த்த அமெரிக்காவுக்கு நான்கு அதிபர்கள், ஆயிரக்கணக்கான உயிர்கள், ட்ரில்லியன் கணக்கிலான டொலர்கள், என்பவற்றுடன் இருபது வருடங்கள் எடுத்திருக்கின்றன” என்று ஓர் இணையத்தளம் ஒரு கேலிச் செய்தியைப் பதிவுசெய்திருக்கிறது.

ஆப்கான் எதிர்காலம் இவர்களுக்கு எப்படி அமையப்போகிறது?அதனால் ஒரு குறிப்பிட்ட எதிர்காலத்துக்கு, வெளிநாடுகளில் இப்படிப்பட்ட பிரச்சினைகளில் தாங்கள் சிக்குப்படுவதை அமெரிக்கா தவிர்க்கக்கூடும். அதற்குப் பதிலாக எதிர்காலத்தில் அப்படிப்பட்ட பாதுகாப்புப் பிரச்சினைகள் ஏற்படும் போது, அவசரப்பட்டு நடவடிக்கைகள் எடுப்பதைத் தவிர்த்து தாம் இழந்த நம்பகத்தன்மையை மீட்க அவர்கள் முயற்சி செய்யலாம் என்று எதிர்பார்க்கலாம்.

‘ஆனால் அதே வேளையில் பழைய பழக்கங்கள் இலகுவில் எம்மை விட்டுப் போவதில்லை’ என்பதையும் நாம் நினைவிற் கொள்ள வேண்டும்.

உண்மையான ஒரு அச்சுறுத்தல் ஏற்படும் போதோ, அல்லது ஒரு விடயம் அச்சுறுத்தலாகப் பார்க்கப்படும் போதோ, அதைத் தவிர்க்கும் பொருட்டு முன்கூட்டியே தாக்குதல்களை ஆப்கானில் தொடுக்கும் உரிமையையை இன்னும் அமெரிக்கா கொண்டிருக்கிறது. அப்பிரதேசத்தின் ஏனைய பகுதிகளில் அவர்கள் செய்வதைப் போன்று, தமது பிரசன்னம் தேவைப்படும் நேரங்களில் அத்தளத்தில் அவர்கள் கட்டாயம் இருக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறி ஆப்கானிலிருந்து தாம் விலகிய விடயத்தை அமெரிக்க அதிகாரிகள் நியாயப்படுத்தி யிருக்கிறார்கள்.

ஆப்கான் எதிர்காலம் இவர்களுக்கு எப்படி அமையப்போகிறது?எதிர் காலத்தில் இப்படிப்பட்ட மோதல்கள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, குறிப்பாக அமெரிக்காவின் ஈடுபாடுகளுக்கு எதிர்காலத்தில் தலிபான்களிடமிருந்து ஏற்படக் கூடிய அச்சுறுத்தல்களைத் தவிர்ப்பதற்காகவோ அன்றேல் குறைப்பதற் காகவோ, ஆப்கானின் அயல்நாடுகளான பாகிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளுடனும் பிராந்தியத்தில் தாக்கம் செலுத்தும் நாடுகளான துருக்கி, கட்டார், சவூதி அரேபியா போன்ற நாடுகளுடனும் அமெரிக்கா மிகவும் நெருக்கமாகப் பணியாற்றக் கூடும்.

பலவிதமான தோல்விகளைச் சந்தித்த போதிலும் கூட, உலக அரங்கில் பல விடயங்களைச் சாதிக்கும் ஆற்றலைக்கொண்ட, உலக நாடுகளுக்குள் மிகச் செல்வந்த நாடாகவும் மிகவும் சக்தி வாய்ந்த நாடாகவும் அமெரிக்கா இன்னும் திகழ்கின்றது. அந்த வகையில், ஆப்கானிஸ்தான் தொடர்பாக ஒரு பொது மூலோபாயம் ஒன்றைப்பற்றிக் கலந்துரையாடுவதற்கென இணையவழி ஜி7 நாடுகளின் சந்திப்பு ஒன்றை பைடன் ஏற்கனவே ஒழுங்கு செய்திருக்கிறார்.

ஆனால் அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் அழுத்தத்தை தலிபான்கள் எப்படிக் கையாளப்போகிறார்கள் அல்லது எப்படிப்பட்ட ஒரு ஆட்சியை ஆப்கான் மக்களுக்கு அவர்கள் வழங்கப் போகிறார்கள் என்பது இன்னும் தெளிவாகவில்லை.

காலத்துக்கேற்றுச் செயற்படும் ஒரு போக்கு, சமரசம் செய்தவற்குத் தயாராக இருத்தல், இன்னும் தங்கள் நாடும் குறிப்பாகத் தலைநகரமும் 2001க்குப் பின்னர் ஐந்து மில்லியன் மக்கள் என ஐந்து மடங்காக அதிகரித்து நிறையவே மாற்றத்துக்கு உள்ளாகியிருக்கிறது என்பதைத் தலிபான்கள் புரிந்திருப்பதை அவர்களது உடனடி அறிக்கைகள் மற்றும் செயற்பாடுகள் கோடிட்டுக்காட்டுகின்றன.

ஒரு காத்திரமான வெற்றியை தலிபான் தலைவர்கள் தற்போது பெற்றிருக்கலாம். ஆனால், 1990களில் தாம் ஆட்சிசெய்த போது எப்படி அந்நியப் படுத்தப்படுத்தப் பட்டார்களோ அதே போல மீண்டும் ஒரு தடவை அந்நியப் படுத்தப் படுவதை அவர்கள் விரும்பவில்லை.

ஆப்கான் எதிர்காலம் இவர்களுக்கு எப்படி அமையப்போகிறது?அதனால் தான், உய்கூர் முஸ்லிம் மக்களை சீனா துன்புறுத்திய போதிலும் கூட, அதன் ஆதரவையும் நிதியுதவியையும் பெற்றுக்கொள்ளும் நோக்குடன், பேஜிங்குடன் அவர்கள் ஏற்கனவே பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கிறார்கள். ஆசியாவில் ஏற்கனவே ஓர் முக்கிய சக்தியாக விளங்குகின்ற அமெரிக்காவை அகற்றித் தாம் அந்த இடத்தைப் பிடிப்பதற்காக மூலோபாய ரீதியாகத் தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த ‘பாதையும் பட்டையும்’ என்ற பெரும் திட்டத்தின் ஓர் பகுதியாக பாகிஸ்தான், ஈரான் மற்றும் ஏனைய ஆசிய நாடுகளில் சீனா தனது உட்கட்டமைப்பு வேலைகளை முன்னெடுத்து வருகிறது.

இவை எவ்வாறு இருப்பினும், தலிபான்களின் தற்போதைய அறிக்கைகளைப் பார்க்கும் போதும், காபூலில் தற்போது பணியாற்றி;க்கொண்டிருக்கின்ற அமெரிக்கப் படைகளுடன் தலிபான்கள் ஒத்திசைவாக இயங்குவதைப் பார்க்கும் போதும், வெளிநாடுகளின் உதவிகள் இல்லாமல் தமது நாட்டை உறுதியான ஒரு நிலைக்குக் கொண்டுவர முடியாது என்பதை தெளிவாக உணர்ந்தவர்களாக, தம்மை அங்கீகரிக்க வேண்டும் என்பதற்காகவும் ஒரு வேளை மேற்குலக நிறுவனங்களிலிருந்து நிதியுதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காகவும் அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தையைத் தலிபான்கள் தொடரவிரும்புவதையே காணக்கூடியதாக இருக்கிறது.

அந்த நோக்கத்துக்காக, அரச ஊழியர்கள் அனைவருக்கும் ஒரு பொது மன்னிப்பை வழங்கிய தலிபான்கள், முன்னைய அரசில் பணியாற்றிய அனைத்து இராணுவ வீரர்களையும் தங்களது படைகளுடன் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். அதுமட்டுமன்றி, கூட்டணி ஆட்சி யொன்றை அமைப்பது பற்றியும் பெண்பிள்ளைகள் பாடசாலைச் செல்ல அனுமதிப்பது பற்றியும் முகத்திரையைப் போட்டபடி பெண்கள் தாம் செய்யும் தொழில்களைத் தொடர்ந்து செய்ய அனுமதிப்பது பற்றியும் அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆப்கான் எதிர்காலம் இவர்களுக்கு எப்படி அமையப்போகிறது?தலிபான்களின் ஓர் இதய பூர்வமான மாற்றத்தை இப்படிப்பட்ட விடயங்கள் வெளிப்படுத்துகின்றனவா அல்லது தாம் ஓரங்கட்டப் படுவதைத் தவிர்க்க அவர்கள் கையாளும் ஓர் உத்தியா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் தாங்கள் கடுமையாகப் போராடி வெற்றி பெற்றதன் பின்னர், மேற்குலகம் சொல்வதை ஓர் அடிப்படைவாத இஸ்லாமியக் குழு கேட்டு நடக்குமா என்பது தொடர்பாக பலர் ஐயப் படுவதையும் காணமுடிகின்றது. ஷறியா சட்டத்துடனும் ஆப்கான் பாரம்பரியங் களுடனும் சனநாயகம் இணைந்து போகாது என்பதை அவர்கள் ஏற்கனவே தெளிவு படுத்தியிருக்கிறார்கள்.

ஆனால், நன்கு செயற்படக்கூடிய ஓர் அரசாக தம்மை மாற்றிக்கொள்ளாது ஒரு பழிவாங்கும் படலத்தை தலிபான்கள் முன்னெடுப்பார்களாக இருந்தால், ஈரான், பாகிஸ்தான் போன்ற நாடுகள் நேரடியாகவோ அன்றேல் பாதிக்கப்படாத இனக்குழுமங்கள் மூலமாகவே அந்த நாட்டில் தலையீடுகளை மேற்கொள்ளலாம்.

ஆப்கான் எதிர்காலம் இவர்களுக்கு எப்படி அமையப்போகிறது?தலிபான்கள் அடைந்திருக்கும் வெற்றியினால் புத்துணர்ச்சியடைந்திருக்கும் ஏனைய இஸ்லாமியக் குழுக்கள் நடுவில் இவையெல்லாம் அதிகமான தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தி, மீண்டும் ஒரு தடவை தாக்குதல்கள், பதில் தாக்குதல்கள் என்ற தீய சக்கரத்துக்குள் அவர்களை இட்டுச்செல்லலாம்.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, ஆப்கானில் போர் ஓர் முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனால் பழிதீர்க்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படலாம்.

இதே போல் ஆப்கானிஸ்தானில் செப்டெம்பர் 11க்குப் பின்னரான அமெரிக்க ஆக்கிரமிப்பின் மீது திரைகள் மூடப்பட்டிருக்கலாம். ஆனால் செம்டெம்பர் 11க்குப் பின்னரான அந்த யுகம் இன்னும் முற்றுப்பெறவில்லை என்பதே யதார்த்தமாகும்.

உலகத்துக்கு இன்றியமையாத ஒரு நாடாகத் தம்மைத் தாமே பறைசாற்றிய அமெரிக்கா, தற்போது தமக்கும் உலகுக்கும் பாரிய அழிவை ஏற்படுத்திவிட்டு, ஏனைய நாடுகள் தம்மை ஓர் முக்கிய நாடாகக் கருதத் தேவையில்லை என்றவொரு நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

அப்பிராந்தியம் முழுவதையும் தமது சொந்த விருப்பத்துக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்க வேண்டும் என்ற இலக்குடன் ஆப்கானை அமெரிக்கா ஆக்கிரமித்து இருபது கடந்து விட்ட பின்னர், உண்மையில் யார், யாரை மாற்றினார்கள் என்பது ஒரு கேள்விக்குறியாகவே எஞ்சியிருக்கிறது.

நன்றி: அல்ஜசீரா