Tamil News
Home செய்திகள் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் அடிப்படை உரிமைகளை மீறும் ஏற்பாடுகள் – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் அடிப்படை உரிமைகளை மீறும் ஏற்பாடுகள் – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் காணப்படும் சில ஏற்பாடுகள்  அடிப்படை உரிமைகளை மீறும்வகையில் காணப்படுகின்றன என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பயங்கரவா எதிர்ப்பு சட்டமூலம் குறித்து ஆராய்வதற்காக  இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழுவே இதனை தெரிவித்துள்ளது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்  தெரிவித்துள்ளது.

உத்தேச சட்டமூலத்தின் சில ஏற்பாடுகள் பிரிவுகள் குற்றவியல்நீதி அமைப்பின் கொள்கைகளையும் குடிமக்களின் சட்ட உரிமைகளையும் மீறுவதாக காணப்படுவதாக இலங்கைசட்டத்தரணிகள் சங்கம் நியமித்த குழு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் உத்தேச சட்டமூலத்தில் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும் என நீதியமைச்சிடமும் தொடர்புபட்ட ஏனைய தரப்பிடமும் வேண்டுகோள் விடுக்கவுள்ளதாக  இலங்கை சட்டத்தரணிகள் சங்கம தெரிவித்துள்ளது.

Exit mobile version