Tamil News
Home செய்திகள் எரிபொருள் தட்டுப்பாடு-மருத்துவமனைகளில் அனைத்து சத்திரசிகிச்சைகளும் நிறுத்தப்படும் அபாயம்

எரிபொருள் தட்டுப்பாடு-மருத்துவமனைகளில் அனைத்து சத்திரசிகிச்சைகளும் நிறுத்தப்படும் அபாயம்

சத்திரசிகிச்சைகளும் நிறுத்தப்படும் அபாயம்

அரசாங்க மருத்துவமனை அமைப்பில் திட்டமிட்ட சத்திர சிகிச்சைகள் தோல்வியடைந்ததால் இந்த ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இன்றோ அல்லது நாளையோ முடிவெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சத்திரசிகிச்சைக்குத் தேவையான இரத்தம் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக திட்டமிடப்பட்டிருந்த இரத்த தான முகாம்கள் இரத்துச் செய்யப்படுவதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதன்படி, விபத்துகளால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிப் பெண்களுக்கான சிசேரியன் மற்றும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சத்திர சிகிச்சைகள் போன்றவற்றுக்கு சிக்கல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதே நேரம் தொற்றா நோய்கள் உட்பட பல்வேறு நோய்களுக்கான மருந்து வகைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், நாட்டில் நோயாளிகளின் உயிருக்கு பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சந்திக கங்கந்த தெரிவித்துள்ளார்.

Exit mobile version