Tamil News
Home செய்திகள் மொட்டு கட்சியிலிருந்து டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் உள்ளிட்ட 16 பேர் விலக தீர்மானம்

மொட்டு கட்சியிலிருந்து டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் உள்ளிட்ட 16 பேர் விலக தீர்மானம்

சிறீலங்கா பொதுஜன பெறமுன முன்னணி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவின் பெயரை ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் முன்மொழிந்த மொட்டு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.எல். பீரிஸ் உட்பட குழு மொட்டு கட்சியில் இருந்து வெளியேறப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், பேராசிரியர் சரிதா ஹேரத் மற்றும் கலாநிதி நாலக கொடஹேவா உட்பட 16 பேர் பொதுஜன முன்னணியில் இருந்து விலகி எதிரணியில் சுயாதீன குழுவாக அமர தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version