Home உலகச் செய்திகள் ‘ஆங்கில கால்வாய் மயானமாக மாறுவதை பிரான்ஸ் அனுமதிக்காது’

‘ஆங்கில கால்வாய் மயானமாக மாறுவதை பிரான்ஸ் அனுமதிக்காது’

506 Views

ஆங்கில கால்வாய் மயானமாக மாறுவதை

பிரான்சிலிருந்து கடல் வழியாக இங்கிலாந்து நோக்கி பயணித்த 31 அகதிகள் உயிரிழந்தது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன், ஆங்கில கால்வாய் மயானமாக மாறுவதை பிரான்ஸ் அனுமதிக்காது எனக் கூறியுள்ளார்.

“மனிதாபிமானம், ஒவ்வொரு நபரின் கண்ணியத்திற்கும் மரியாதை அளித்தல் என்பது ஐரோப்பாவின் விழுமியங்களாகும்- அவை துக்கத்தில் உள்ளன,” என குறிப்பிட்டுள்ள பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் புலம்பெயர்வு சவாலை எதிர்கொண்ட ஐரோப்பிய அமைச்சர்களின் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

இந்த நிலையில், இந்த விபத்திற்கு நேரடி தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டர்மேனின் தெரிவித்திருக்கிறார்.

வடக்கு பிரான்சின் Dunkrik பகுதியில் இருந்து சுமார் 50 அகதிகளுடன் சென்ற படகே இவ்விபத்தில் சிக்கியுள்ளது.

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version