நான்கு மில்லியன் மக்கள் உக்ரேனை விட்டு வெளியேற்றம்

நான்கு மில்லியன் மக்கள் உக்ரேனை விட்டு வெளியே

உக்ரேனில் இடம்பெறும் போர் காரணமாக கடந்த புதன்கிழமை (30) வரை நான்கு மில்லியன் மக்கள் உக்ரேனை விட்டு வெளியேறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது.

அங்கிருந்து வெளியேறிய 4,019,287 மக்களில் 2.3 மில்லியன் மக்கள் போலந்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிகளை வழங்குவது தொடர்பில் தாம் அதிகாரிகளுடன் பேசி வருவதாக அதன் தலைவர் பிலிப்போ கிராண்டி தெரிவித்துள்ளார்.

18 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்ட ஆண்கள் வெளியேறுவதை கட்டாய இராணுவ சேவையின் நிமித்தம் உக்ரேன் அரசு தடுத்துள்ளதால், வெளியேறியவர்களின் 90 விகிதமானவர்கள் சிறுவர்களும் பெண்களுமே என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, உக்ரேனுக்குள் 6.5 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும், வெளிநாட்டவர்கள்  200,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.