Home செய்திகள் அமெரிக்காவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலாளர் கொரோனோவுக்கு பலி

அமெரிக்காவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலாளர் கொரோனோவுக்கு பலி

முன்னாள் வெளிவிவகாரச் செயலாளர் கொரோனோவுக்கு பலிஅமெரிக்காவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலாளர் கொரோனோவுக்கு பலி: அமெரிக்காவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலாளர் கொலின் பாவல் (84) கோவிட்-19 நோய் காரணமாக இன்று (18) உயிரிழந்துள்ளார்.

ஆபிரிக்க இனத்தவரான அமெரிக்காவின் முதலாவது வெளிவிவகாரச் செயலாளாரின் மறைவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட பல அரசியல் தலைவர்கள் தமது அஞ்சலிகளை தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் படைத்துறையில் பாவல் மிக உயர்ந்த பதவி வகித்திருந்தார். பாவல் மிகச்சிறந்த படை தளபதியாகவும், இராஜதந்திர அதிகாரியாகவும் பணியாற்றியவர் என்பதுடன், அமெரிக்காவின் பாதுகாப்பை பலப்படுத்தியவர். இனப்பாடுபாடு என்ற தடையை பல தடவைகள் உடைத்து, அடுத்த தலைமுறைக்கான தலைமைத்துவத்தை உருவாக்கியவர் என பைடன் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க படையில் மிகப்பெரும் போற்றத்தக்க அதிகாரியாக இருந்தவர் பாவல் என அமெரிக்காவின் வெளிவிவகார செயலாளர் அந்தோனி பிளிங்டன் தெரிவித்துள்ளார்.

ஜோர்ச் புஷ் இன் ஆட்சிக்காலத்தில் பணியாற்றிய பாவல் ஈராக் போரை நடத்தியிருந்தார். மேலும் 1989 ஆம் ஆண்டு இடம்பெற்ற பனமா மீதான நடைவடிக்கையிலும் பங்குபற்றியிருந்தார்.

வியட்னாம் போரின் போது சிப்பாயாக பணியாற்றிய பாவல் மிகச் சிறந்த பொதுப்பணியாளர் என புஷ் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் றீகனின் ஆட்சிக் காலத்தில் பாதுகாப்பு ஆலோசகாராகவும், எனது தந்தையார் மற்றும் கிளிங்டனின் காலத்தில் கூட்டுப்படை தளபதியாகவும், எனது ஆட்சிக்காலத்தில் வெளிவிவகாரச் செயலாளராகவும் பாவல் பணியாற்றியிருந்தார் என புஷ் தெரிவித்துள்ளார்.

Exit mobile version