Tamil News
Home செய்திகள் அவுஸ்திரேலியா: தஞ்சக்கோரிக்கையாளர்கள் வருகையைத் தடுக்க தற்காலிக விசாக்களை நடைமுறையில் வைத்திருக்க வலியுறுத்தும் முன்னாள் அமைச்சர்

அவுஸ்திரேலியா: தஞ்சக்கோரிக்கையாளர்கள் வருகையைத் தடுக்க தற்காலிக விசாக்களை நடைமுறையில் வைத்திருக்க வலியுறுத்தும் முன்னாள் அமைச்சர்

அவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வரும் ஆட்கடத்தல்காரர்கள் மற்றும் தஞ்சக் கோரிக்கையாளர்கள் வருகையைத் தடுக்க தற்காலிக பாதுகாப்பு விசாக்கள் நடைமுறையில் வைத்திருப்பது அவசியமானது எனக் கூறியுள்ளார் அவுஸ்திரேலியாவின் முன்னாள் உள்துறை அமைச்சர் கரேன் ஆண்டூருஸ்.

அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முயன்ற சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கைத் தஞ்சக்கோரிக்கையாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ள சூழலில், அவுஸ்திரேலியாவின் எல்லைக் கொள்கை மாறவில்லை என தொழிற்கட்சி அரசாங்கம் உறுதிப்பட தெரிவித்திருக்கிறது.

“தற்காலிக பாதுகாப்பு விசாக்களுக்கு முடிவுக் கட்டுவோம் எனத் தொழிற்கட்சி தெளிவாக தெரிவித்துள்ளதால் எதுவும் மாறவில்லை எனத் தொழிற்கட்சியால் சொல்ல முடியாது,” என விமர்சித்திருக்கிறார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் உள்துறை அமைச்சர் (தாராளவாத அரசங்கம்) கரேன் ஆண்டூருஸ்.

தற்காலிக பாதுகாப்பு விசாக்கள் என்பது எல்லைகள் இறைமை நடவடிக்கையின் (Operation Sovereign Borders) முக்கியமான அங்கம் என கரேன் ஆண்டூருஸ் மேலும் தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version