Tamil News
Home செய்திகள்  ருவாண்டாவில் அகதிகளை சிறைப்படுத்தும் இங்கிலாந்தின் திட்டம் குறித்து அச்சம் தெரிவிக்கும் முன்னாள் அவுஸ்திரேலிய தடுப்பு முகாம் அகதி 

 ருவாண்டாவில் அகதிகளை சிறைப்படுத்தும் இங்கிலாந்தின் திட்டம் குறித்து அச்சம் தெரிவிக்கும் முன்னாள் அவுஸ்திரேலிய தடுப்பு முகாம் அகதி 

இங்கிலாந்தில் தஞ்சமடையும் அகதிகளை அச்சுறுத்துவதற்காகவே ருவாண்டாவில் அகதிகளை சிறைப்படுத்தும் திட்டத்தை இங்கிலாந்து உள்துறை அமைச்சர் பிரீத்தி பட்டேல் நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறார் என முன்னாள் அவுஸ்திரேலிய தடுப்பு முகாம் அகதி குற்றம் சாட்டியிருக்கிறார்.

நவுருத்தீவில் அவுஸ்திரேலியா அகதிகளை சிறைப்படுத்தி வைத்திருந்தது போலவே இங்கிலாந்தும் முயற்சித்திருக்கிறது என அந்த அகதி தெரிவித்திருக்கிறார்.

எல்லி ஷகிபா முதன் முதலில் நவுருத்தீவுக்கு கொண்டு செல்லப்பட்ட போது இங்கு சிறிது காலமே இருப்போம் என எண்ணியிருக்கிறார். ஆனால், ஈரானிலிருந்து வெளியேறி இந்தோனேசியா வழியாக அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த அவர் அத்தீவில் 6 ஆண்டுகள் ஆஸ்திரேலிய அரசால் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

“எங்களை உதாரணமாக காட்டுவதற்காகவே அவுஸ்திரேலியா நவுருத்தீவு முகாம் உருவாக்கியது. அவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வரும் அகதிகளுக்கு என்னவாகும் என்னாகும் என்பதை சொல்லும் விதமாக இம்முகாம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது,” எனக் கூறுகிறார் அமெரிக்காவில் தற்போது வசித்து வரும் முன்னாள் அகதியான எல்லி ஷகிபா.

“அவுஸ்திரேலியா செய்ததை தான், தற்போது இங்கிலாந்து உள்துறை அமைச்சர் பீரித்தி பட்டேல் செய்கிறார்,” என ஷகிபா கூறியிருக்கிறார்.

ஐரோப்பியாவிலிருந்து இங்கிலாந்தை படகு வழியாக சென்றடையும்  தஞ்சக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு அனுப்பும் புதியதொரு ஒப்பந்தம் இங்கிலாந்து- ருவாண்டா இடையே சமீபத்தில் கையெழுத்தானது. கடந்த ஆண்டு மட்டும் சிறிய படகுகள் வழியாக சுமார் 28 ஆயிரம் இங்கிலாந்தில் தஞ்சமடைந்திருக்கின்றனர், இந்த எண்ணிக்கை கடந்த 2020ல் 8500 ஆக இருந்தது.

தற்போதைய புதிய ஒப்பந்தத்தின் படி, இங்கிலாந்தில்  சிறிய படகுகள் வழியாக தஞ்சமடைபவர்களை அந்நாட்டிலிருந்து 6400 கிலோ மீட்டர் அப்பால் உள்ள ருவாண்டாவுக்கு இங்கிலாந்து அரசு அனுப்பயிருக்கிறது. சட்டவிரோத புலம்பெயர்வை தடுப்பதற்கான நடவடிக்கையாக சொல்லப்படும் இதை இங்கிலாந்து எதிர்க்கட்சியினரும் அகதிகள் நல செயல்பாட்டாளர்களும் ‘மனிதாபிமானமற்றது, மக்கள் பணத்தை வீணடிப்பது’ என கடுமையாக விமர்சித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Exit mobile version