Tamil News
Home செய்திகள் இலங்கையில் 2024ஆம் ஆண்டு வரை உணவுப் பற்றாக்குறை நீடிக்கலாம்- பிரதமர் ரணில்

இலங்கையில் 2024ஆம் ஆண்டு வரை உணவுப் பற்றாக்குறை நீடிக்கலாம்- பிரதமர் ரணில்

இலங்கையில்  2024ஆம் ஆண்டு வரை உணவுப் பற்றாக்குறை நீடிக்கலாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தள்ளார்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியானது இலங்கையினால் ஏற்பட்டுள்ளதாகவும், உக்ரைன் யுத்தம் அதனை தீவிரப்படுத்தியுள்ளதாகவும்   சீனாவிடம் இருந்து மேலும் நிதி உதவிகளை ஏற்க இலங்கை தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்  “வேறு மூலங்களிலிருந்து பெற்றுக் கொள்ள முடிந்தால், அங்கிருந்து பெற்றுக்கொள்வோம். இல்லையேல் மீண்டும் ரஷ்யா செல்ல வேண்டும். இலங்கைக்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு முதலில் வேறு வழிகளை தேடுவோம். ஆனால் மொஸ்கோவில் இருந்து அதிகளவு கச்சா எண்ணெயை கொள்வனவு செய்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது” என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version