பங்களாதேசிலிருந்து புறப்பட்ட ரோஹிங்கியா அகதிகளின் ஐந்து படகுகள் – மனித உரிமை அமைப்பு தகவல்

இடைநடுவில் சிக்குண்டுள்ள ரோஹிங்கியா அகதிகளிற்கு பாதுகாப்பை வழங்கவேண்டும் என  ரோஹிங்கியாக்களின் மனித உரிமை அமைப்பொன்று வேண்டுகோள் விடுத்துள்ளது.

புதுடில்லியை தளமாக கொண்ட ரோகிங்யா ஹியுமன் ரைட்ஸ் இனிசியேட்டிவ் என்ற அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது,

ரோஹிங்கியாக்களின் மனித உரிமை அமைப்பான நாங்கள் இலங்கையின் வடபகுதி கடலில்; 18ம் திகதி தத்தளித்துக்கொண்டிருந்த 105 ரோஹிங்கியா அகதிகள் உடனான படகை காப்பாற்றியமைக்காக இலங்கை கடற்படையினருக்கு பாராட்டுக்களை தெரிவிக்கின்றோம்.

பல உயிர்களை காப்பாற்றிய கடற்படையின் உறுதியான நடவடிக்கைகளை நாங்கள் பாராட்டுகின்றோம். மீட்கப்பட்டவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் இலங்கை அரசாங்கத்திற்கு உதவிவரும் UNHCR ஆருக்கு தொடர்ந்தும் எங்கள்  நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஆபத்தானநிலையில் உள்ளவர்கள் நடுக்கடலில் தத்தளிப்பவர்களை பொறுப்புணர்வுள்ள அனைத்து அரசாங்கங்களும்  காப்பாற்றவேண்டும் என ஐநா அமைப்பு விடுத்துள்ள வேண்டுகோளை நாங்கள் அங்கீகரிக்கின்றோம்.

எங்கள் சமூக தகவல்களின் அடிப்படையில் சில தகவல்களை பகிர்ந்துகொள்ள முயல்கின்றோம். ஐந்து படகுகள் பங்களாதேசிலிருந்து புறப்பட்டுள்ளன,நவம்பரில் புறப்பட்ட  இரண்டு படகுகள் இந்தோனேசியா சென்றடைந்துள்ளன,இதில் ஒரு படகு 110 பேருடன் அசேயை சென்றடைந்துள்ளது,( 15 நவம்பர்) அங்கு அவர்கள் நாளாந்த வசதிகளுடன் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

டிசம்பரில் மூன்று படகுகள் பங்களாதேசிலிருந்து புறப்பட்டுள்ளன,இவற்றில் ஒன்றை இலங்கை கடற்படை காப்பாற்றியுள்ளது,இன்னொரு படகை மியன்மார் 154 பேருடன் கைப்பற்றியுள்ளது. அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என எங்களிற்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

இன்னொரு படகு 160 பேருடன் அந்தமான் நிக்கோபார் தீவிற்கு அருகில் காணப்பட்டது காணாமல்போயுள்ளது என தகவல்கள்  வெளியாகியுள்ளன. பல தசாப்தங்களாக மியன்மாரில் உள்ள ரோஹிங்கியா கடுமையான பரந்துபட்ட ஒடுக்குமுறையை எதிர்கொண்டுள்ளனர்,பிரஜாவுரிமைக்கான  அவர்களின் உரிமை  நடமாட்ட சுதந்திரம் போன்றவை மறுக்கப்பட்டுள்ளன. அவர்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களிற்கு பலியானவர்கள் .

கடப்பாடுகளை பகிர்ந்துகொள்வதன் மூலம் சர்வதேச சமூகத்திற்கு ரோஹிங்கியா அகதிகளின் உரிமைகளை பாதுகாக்கவேண்டிய பொறுப்புணர்வுள்ளது.

நாங்கள் குறிப்பிட்ட படகுகளில் இறுதி படகு கண்டுபிடிக்கப்படும் மீட்கப்படும் நாங்கள் கருதுகின்றோம், படகில் இருந்து கைதுசெய்த 154 அகதிகளை சிறையில் அடைத்தமைக்காக மியன்மார் அரசாங்கத்தை கண்டிக்கின்றோம்.