Tamil News
Home செய்திகள் இலங்கை-எரிபொருள் விலை உயர்வால் மீன்பிடி நடவடிக்கைகள் வீழ்ச்சி

இலங்கை-எரிபொருள் விலை உயர்வால் மீன்பிடி நடவடிக்கைகள் வீழ்ச்சி

இலங்கையில் தொடர்ந்து அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள், மீன்பிடித் தொழிலுக்கு பாதகமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அகில இலங்கை கடற்றொழில் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

அகில இலங்கை கடற்றொழில் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளரான ரத்ன கமகே இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

கடலுக்கு செல்லும் ஒரு பயணத்திற்காக ஒரு மீன்பிடி இழுவை படகானது டீசல் கொள்வனவுகள், எரிபொருள் உபகரணங்கள் மற்றும் இதர தேவைகளுக்காக 2.5 மில்லியன் ரூபாவை விலையேற்றத்தின் விளைவாக ஒதுக்கியுள்ளது.

அவர்களின் சுமைகளை குறைத்து நிவாரணம் வழங்க வேண்டும். எரிபொருள் விலை திருத்தமானது முன்னைய விலையை விட மூன்று மடங்கு அதிகமாகும்.   இதனால் தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

விலைவாசி உயர்வு காரணமாக மீனவர்கள் கடல் பயணத்தை குறைத்துள்ளனர்.  இவ்வாறான சூழ்நிலையில் மீன்பிடிப்பும் குறைந்தால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.  மீன்பிடித் தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைக்க புதிய அரசாங்கம் செயற்படுகிறதா?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Exit mobile version