முல்லைத்தீவு, வவுனியா விவசாயிகளும் ஆர்ப்பாட்டம்

வவுனியா விவசாயிகளும் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கக் கோரி வடக்கு கிழக்கில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. முல்லைத்தீவு, வவுனியா விவசாயிகளும் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளனர்.

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின்  மாந்தைகிழக்கு  மற்றும் துணுக்காய் பிரதேச விவசாயிகள் இன்று காலை 9 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்த்திருந்தனர்

அதில் ஓர் அங்கமாக துணுக்காய் மற்றும் பாண்டியன்குளம் விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் துணுக்காய் மற்றும் பாண்டியன்குளம் கம நல சேவை நிலையங்கள் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கொல்லாதே கொல்லாதே விவசாயிகளை கொல்லாதே , விவசாயிகளுக்கான உரம், கிருமிநாசிகளை போதியளவு கிடைக்க வழி செய், உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை பாண்டியன்குளம் கமநலசேவை நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளினால் பிரதேச விவசாய போதனாசிரியரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

a 7 முல்லைத்தீவு, வவுனியா விவசாயிகளும் ஆர்ப்பாட்டம்

அதே நேரம், விவசாயத்திற்கான உரத்தினை வழங்குமாறு கோரி வவுனியா இலுப்பையடிப்பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இலுப்பையடிப்பகுதியில் அமைந்துள்ள கோவில்குளம் கமநலசேவை நிலையம் மற்றும் பம்பைமடு, நெடுங்கேணி, கனகராஜன்குளம் ஆகிய கமநல சேவை நிலையங்களிற்கு முன்பாக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.

இதில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவித்த போது,

விவசாயமே எமது வாழ்வாதாரம். தற்போது பயன்படுத்தப்படும் நெல்லினங்கள் அனைத்தும் பசளையின் தூண்டல்பேற்றினால் விளையக்கூடியவையாகவே உள்ளது. எனவே அதற்கான பசளையை வழங்காவிட்டால் அது உரிய விளைச்சலை தராது. அந்த இராசயன உரத்தினை இடைநிறுத்தும் செயற்பாட்டினை பகுதியாக முன்னெடுத்திருக்க முடியும். அதனை முழுமையாக தடைசெய்து விவசாயிகளின் வயிற்றில் இந்த அரசு அடித்துள்ளது.

எமது மண் இரசாயன உரத்துக்கு பழக்கப்பட்டது. சேதனப்பசளை மண்ணை வளப்படுத்துமே தவிர அதில் உள்ள மூலப்பொருட்களின் அளவு மிகவும் குறைவு. அது நெல்லின் விளைச்சலை பெரிதும் பாதிக்கும். அதனால் நட்டம் ஏற்படும் நிலைமையே காணப்படும்.

எனவே அரசு இதனை கருத்தில் கொண்டு எமக்கான மானிய உரங்களை வழங்கி நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயத்தை மேம்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதே, உரத்தையும் உரமானியத்தையும் உடனேவழங்கு, யூரியா பசளையை நிறுத்திய நீ இயற்கை பசளையை ஏன் தரவில்லை ஆகிய வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

ilakku Weekly Epaper 152 october 17 2021 Ad முல்லைத்தீவு, வவுனியா விவசாயிகளும் ஆர்ப்பாட்டம்