மகாராஷ்டிராவில் நிலச்சரிவில் இதுவரை 36 பேர் உயிரிழப்பு

Ghoram: Landslides kill 36, some in rubble - Heavy rains | Maharashtra rains: 36 dead in Raigad landslide, several trapped

மகாராஷ்டிராவின் தலியே கிராமத்தில் நிகழ்ந்த பெரும் நிலச்சரிவில் இதுவரை  36 பேர் உயிரிழந்துள்ளனர்.

 கடந்த 4 நாட்களாக மகாராஷ்டிராவில் தொடர்ந்து மிக கன மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக கரையோர மாவட்டங்களான ரைகாட், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் ஆகிய இடங்களில் தொடர் மழையால் நிலைமை மிகவும் மோசமானது. அப்பகுதியில் உள்ள வஷிஸ்தி, ஜக்புடி மற்றும் கஜலி நதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பல கிராமங்களும் சிறு நகரங்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

இந்நிலையில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்ரே, ரைகாட் மாவட்டத்தில் 35 பேர் உயிரிழந்ததாக உறுதிபடுத்தினார். நிலச்சரிவில் பலரும் சிக்கி இருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடலோர மற்றும் மத்திய மகாராஷ்டிரா பகுதிகளில் ஜூலை 22 முதல் 26 வரை கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

ilakku-weekly-epaper-139-july-18-2021