அவுஸ்திரேலியாவில் கொரோனா: வேற்று இன மக்கள் உள்ள இடங்களில் தீவிர ஊரடங்கு எனக் குற்றச்சாட்டு

வேற்று இன மக்கள் உள்ள இடங்களில் தீவிர ஊரடங்கு

அவுஸ்திரேலியாவின் மேற்கு மற்றும் தென்மேற்கு சிட்னி பகுதிகளில் தீவிரமான ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதாகவும் அங்கு வசிக்கும் வேற்று இன மக்கள் உள்ள இடங்களில் தீவிர ஊரடங்கு அமுல்ப்படுத்தப் பட்டுள்ளதால், அங்குள்ள மக்கள் குற்றவாளிகளைப் போல தாங்கள் உணர்வதாகவும் அவுஸ்திரேலிய பாராளுமன்ற விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு இன மக்கள் வாழக்கூடிய அப்பகுதிகள் பன்மை கலாசாரங்களின் மையங்களாக கூறப்படும் சூழலில் சிட்னி மற்ற பகுதிகளைப் போல் அல்லாமல் கடுமையான கட்டுப்பாடுகளுக்குள் உள்ளதாகக் கூறப்படுகின்றது. சிட்னியின் மற்ற பகுதிகளில் இருந்து முற்றிலும் அந்நியப்பட்டதாக இருப்பதாக சமூகத்தலைவர்கள் விசாரணையின் போது தெரிவித்திருக்கின்றனர்.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021