சுரண்டப்படும் வெளிநாட்டு தொழிலாளர்கள்: அவுஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட புதிய ஆய்வில் தகவல் 

சுரண்டப்படும் வெளிநாட்டு தொழிலாளர்கள்

சுரண்டப்படும் வெளிநாட்டு தொழிலாளர்கள்: அவுஸ்திரேலியாவில் தற்காலிக விசாவாசிகள் இடையே நடத்தப்பட்ட ஆய்வில், 65 சதவீதமான தற்காலிக விசாவாசிகள் குறைவான சம்பளப் பிரச்னையை எதிர்கொண்டதாகவும் நான்கில் ஒரு தொழிலாளி சுரண்டலுக்கு உள்ளாவதாகவும் தெரிய வந்துள்ளது.

சுமார் 700 புலம்பெயர்ந்தவர்களிடம் புலம்பெயர்வு தொழிலாளர்கள் மையம் நடத்திய இந்த ஆய்வில், வேலை வழங்குபவர்கள் ஏற்பாடு செய்யும் விசாவில் உள்ள வெளிநாட்டவர்கள் அதிகபட்ச அழுத்தங்களுக்கு உள்ளாவதாகக் கூறப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க திறன்வாய்ந்த வெளிநாட்டுத் தொழிலாளர்களை அனுமதிக்க வேண்டும் என அவுஸ்திரேலியாவின் தொழில் குழுக்களும் விவசாயிகளும் கோரியுள்ளனர்.

ஓமிக்ரான் கொரோனா அச்சம் காரணமாக, வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் திறன்வாய்ந்த வெளிநாட்டு தொழிலாளர்களை ஆவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கும் முடிவினை அவுஸ்திரேலிய அரசு தள்ளிப்போட்டுள்ள நிலையில், வெளிநாட்டு தொழிலாளர்கள் தொடர்பான ஆய்வு வெளியாகியுள்ளது.

விவசாயத்துறை முதல் மருத்துவத்துறை, தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்கள் வரை அவுஸ்திரேலியா வெளிநாட்டுத் தொழிலாளர்களை நம்பியிருந்தாலும் விசா முறை அத்தொழிலாளர்களை நிச்சயத்தன்மையற்ற நிலை, அழுத்தம் மற்றும் சுரண்டலுக்கு ஆளாக்குவதாக புலம்பெயர்வு தொழிலாளர்கள் மையம் கூறியுள்ளது.