Home செய்திகள் காவல்துறை, இராணுவத்தினருக்கு மிதமிஞ்சிய அதிகாரம்-ஐ.நா நிபுணர் கண்டனம்

காவல்துறை, இராணுவத்தினருக்கு மிதமிஞ்சிய அதிகாரம்-ஐ.நா நிபுணர் கண்டனம்

385 Views

காவல்துறை மற்றும் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள அவசரகால அதிகாரங்கள், மிதஞ்சிய படையினரின் பயன்பாடு, தன்னிச்சையான கைதுகள் உள்ளடங்கலாக ஆர்ப்பாட்டங்கள் முடக்கப்பட்டுள்ளமையைக் கடுமையாகக் கண்டிப்பதாக ஒன்றுகூடுதலுக்கான சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் கிளெமன்ற் வொயூல் தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் மேற்கண்டவாறு கண்டனம் வெளியிட்டுள்ளார்.

காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள அவசரகால அதிகாரங்கள், மிதஞ்சிய படையினரின் பயன்பாடு, தன்னிச்சையான கைதுகள் உள்ளடங்கலாக ஆர்ப்பாட்டங்கள் முடக்கப்பட்டுள்ளமையை நான் கடுமையாகக் கண்டிக்கின்றேன்.

அதிகாரிகள் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதை நிறுத்திக் கொள்வதுடன், அவர்களது உரிமைகளுக்கு மதிப்பளித்துப் பாதுகாக்க வேண்டும். மாறாக அவர்களை அமைதிப்படுத்துவது முறையான பதிலாக இருக்காது’ என்ற தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version