Home செய்திகள் பேரறிவாளனுக்கு கிடைத்த தீர்ப்பால் அனைவருக்கும் விரைவில் நன்மை நடக்கும்- அற்புதம்மாள்

பேரறிவாளனுக்கு கிடைத்த தீர்ப்பால் அனைவருக்கும் விரைவில் நன்மை நடக்கும்- அற்புதம்மாள்

378 Views

முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்

‘பேரறிவாளனுக்கு கிடைத்த தீர்ப்பால் அனைவருக்கும் விரைவில் நன்மை நடக்கும். முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம். 31 ஆண்டு சிறைவாசம் அனுபவித்து பாதிக்கப்பட்டுள்ளோம்’ என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

பேரறிவாளனின் தாயாரும் அவருடைய விடுதலைக்கு நீண்ட காலம் போராட்டம் நடத்தியவருமான அற்புதம்மாள் சென்னை புழல் சிறையில் ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் உள்ளிட்டவர்களைச் சந்தித்து கலந்துரையானார். குறிப்பாக உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெரும் ராபரட் பயஸ் அவர்களை சந்தித்து நலம் விசாரித்திருந்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துக் கருத்து தெரிவித்த அவர்,  ‘ராபர்ட் பயாஸின் உடல்நிலையை கருத்தில் கொண்டு முதல்வர் உடனே பரோல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  வழக்கிலிருந்து மற்றவர்கள் விடுதலையாகததால் பேரறிவாளன் மன வருத்தத்துடன் உள்ளார்“  என்றார்.

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version