Tamil News
Home செய்திகள் இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் நிதியுதவி

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் நிதியுதவி

இந்நாட்டின் நிலையான கைத்தொழில் அபிவிருத்திக்காக ஐரோப்பிய ஒன்றியம் சுமார் 23 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி 22.83 மில்லியன் அமெரிக்க டொலர்களும் மற்றும் 18.75 மில்லியன் யூரோவும் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பின் இலங்கைப் பிரதிநிதி Rene Van Berkel தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பின் இலங்கையின் கைத்தொழில் அபிவிருத்திக்கான தேசிய திட்ட அமுலாக்கல் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கைத்தொழில் அபிவிருத்தித் திட்டங்களுக்கும் காலநிலை மாற்றம், எரிசக்தி முகாமைத்துவம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளின் அபிவிருத்திக்காக இந்த நிதி உதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version