Tamil News
Home செய்திகள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் பிரயோகம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் பிரயோகம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை

சமூக செயற்பாட்டாளர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தை (PTA) பயன்படுத்தி கைதுசெய்யப்பட்டதாக வெளியான செய்தி குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை அலுவலகம் கவலை தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை அலுவலகம் ட்விட்டர் செய்தியொன்றின் ஊடாக இதனை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், அண்மைய கைதுகளில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) பயன்படுத்தப்பட்டதாக வெளியான அறிக்கைகள் குறித்து கவலையடைவதாக ஐரோப்பிய ஒன்றிய அலுவலகம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கான நடைமுறை தடை தொடர்பில் இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய தகவல்களையும் தமது அலுவலகம் அவதானிப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

கடந்த 18 ஆம் திகதி நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியின் போது பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, ஹஷான் ஜீவந்த மற்றும் வண. கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை அலுவலகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Exit mobile version