Notice: Undefined variable: _SESSION in /home/gi5h742vtw17/public_html/www.ilakku.org/index.php on line 1
சுகாதார கட்டுப்பாடுகள் உரிமைகளை மீறாதிருப்பது அவசியம்
Home செய்திகள்  சுகாதார கட்டுப்பாடுகள் உரிமைகளை மீறாதிருப்பது அவசியம்- ஐ.நா

 சுகாதார கட்டுப்பாடுகள் உரிமைகளை மீறாதிருப்பது அவசியம்- ஐ.நா

hanaa singer  சுகாதார கட்டுப்பாடுகள் உரிமைகளை மீறாதிருப்பது அவசியம்- ஐ.நா

ஒன்று கூடுவதற்கான உரிமை என்பது அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமையையும் உள்ளடங்கியிருப்பதாக ஐ.நா சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி (Hanaa Singer)ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா பரவலைக் கருத்திற் கொண்டு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் உண்மையில் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான கட்டுப் பாடுகளுக்கு அப்பாற்பட்டுச் செல்லாமலிருப்பது அவசியமாகும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

இலங்கையில் கொரோனா பரவல் காரணமாக பொது மக்கள் அதிகளவில் ஒன்று கூட, ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூடடங்கள், நடத்த தடை செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் செய்வோரைக் கைது செய்யும் செயற்பாட்டை காவல் துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

குறிப்பாக இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் தலைமையில் நடை பெற்ற ஜோன் கொத்தலாவல தேசியப் பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஜோசப் ஸ்டாலினை கைது செய்தமை தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத் தளங்களில்  பரவி கடுமையான எதிர்ப் பலைகளையும் சர்ச்சைகளையும் தோற்றுவித்துள்ளன.

இந்நிலையில், ஐ.நாவின் இலங்கைக்கான பிரதிநிதி ஹனா சிங்கர், தனது ருவிட்டர் பக்கத்தில், ஒன்று கூடுவதற்கான உரிமை என்பது அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமையையும் உள்ளடங்கியதாககும். அத்தகைய உரிமைகளான கருத்து சுதந்திரம் மற்றும் பொது நிர்வாக கொள்கைகளின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கான சுதந்திரம் ஆகியவற்றை உரியவற்றுக்கு பிரயோகிப்பதற்கு உதவுகின்றது என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 137

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version