அவசரகாலச் சட்ட விதிமுறைகள் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்; சஜித்

அவசரகாலச் சட்ட விதிமுறைகள்அவசரகாலச் சட்ட விதிமுறைகள்: “ஐக்கிய மக்கள் சக்தி, அவசரகால விதிமுறைகளைக் கடுமையாக எதிர்க்கின்றது. மக்களின் ஜனநாயகத்தின் மீது இத்தகைய தாக்குதலை மேற்கொள்ள அரசு எடுத்துள்ள அனைத்து நடவடிக்கைகளையும் தோற்கடிப்போம்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அவர் நேற்று வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் மேலும் உள்ளதாவது:-

“நாட்டுக்குத் தற்போது அவசரகால நிலை அவசியமில்லை. உயிர்களைக் காப்பாற்ற வேண்டியதே அவசியம். பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த அவசரகால நிலை தேவையில்லை. அதற்குப் பதிலாக 2003ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க நுகர்வோர் விவகார ஆணைக்குழு சட்டமும், அதிகார சபையும் அந்த நோக்கத்துக்காக இருக்கின்றன.

அரசு நுகர்வோர் விவகார சட்டத்தை நண்பர்களுக்கு நிவாரணம் வழங்கப் பயன்படுத்துகின்றது. பொதுமக்கள் அத்தகைய ஓர் ஆட்சியை விரும்பவில்லை. கொரோனாத் தொற்றுநோய் ஒரு தேசிய அனர்த்தம் என்பதோடு இவ்வாறான அனர்த்தங்களின்போது 2005ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் செயல்பட அதிகாரம் உள்ளது.

அதன் மூலம் அனர்த்த முகாமைத்துவ தேசிய சபை ஒன்றை ஸ்தாபிக்க முடியும். எனினும், ஜனாதிபதி இன்னும் அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி அவசரகால விதிமுறைகளைக் கடுமையாக எதிர்க்கின்றது. மக்களின் ஜனநாயகத்தின் மீது இத்தகைய தாக்குதலை மேற்கொள்ள அரசு எடுத்துள்ள அனைத்து நடவடிக்கைகளையும் தோற்கடிப்போம்” என்றுள்ளது.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021