வடக்கு மீனவர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு இந்திய தூதரகம் தனது ஒத்துழைப்பை வழங்கும்-தூதர் கோபால் பால்கே

இந்திய தூதரகம் தனது ஒத்துழைப்பை வழங்கும்

வடக்கு மீனவர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு இந்திய தூதரகம் தனது ஒத்துழைப்பை வழங்கும் என இலங்கைக்கான இந்திய  தூதர் கோபால் பால்கே தெரிவித்தார்.

யாழ் மாவட்ட மீனவ சங்கப் பிரதிநிதிகள் உட்பட பலரை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினேன். அதிலிருந்து நான் ஒன்றை புரிந்து கொள்கின்றேன். மீனவர் பிரச்சனையை தீர்க்க வேண்டியது கட்டாயமானது. மீனவ பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம்.

இந்திய துணைத் தூதரகம் என்ற ரீதியில் மீனவபிரதிநிதிகளின் பிரச்சினை தொடர்பில் அதனை தீர்ப்பதற்கு உறுதியாக இருக்கின்றோம். இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு முதலீட்டாளர்களை முதலீடு வைத்து மீன்பிடி சம்பந்தமான முதலீடுகளை இங்கே முதலிட வைத்து அவ்வாறான முதலீடுகளை முதலிடுவதன் மூலம் மீனவர் சமூகங்களுக்கு அதன் மூலம் வருமானத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றோம் அது தொடர்பில் நான் யாழ்ப்பாண இந்திய துணை தூதுவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன் அது தொடர்பில் நானும் எனது அணுசரணையை வழங்க உள்ளேன்.

அனைவரும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன். அத்தோடு வெகு விரைவில் எமது அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள கலாச்சார மத்திய நிலையம் திறந்து வைக்கப்பட உள்ளது. அத்தோடு கலாச்சார மத்திய நிலையத்தை இரண்டு நாடுகளும் இணைந்து எவ்வாறு நிர்வகிப்பது தொடர்பில் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்தி இருக்கிறோம்” என்றார்.

Tamil News