Tamil News
Home செய்திகள் வடக்கிலேயே அதிக தேர்தல் விதிமுறை மீறல்கள்- தேர்தல் ஆணையாளர்

வடக்கிலேயே அதிக தேர்தல் விதிமுறை மீறல்கள்- தேர்தல் ஆணையாளர்

ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடும்போது, வடக்கில், தேர்தல் விதிமுறை மீறல்கள் அதிகமாக இடம்பெறுவதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது என தேர்தல்  ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். வீதிகளில் வேட்பாளர் களின் இலக்கங்கள் மற்றும் சின்னங்கள் எழுதப்படுவது இங்கு அதிகமாக உள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.

வடக்குக்கு 2 நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, நேற்று (14), யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டார். இந்தச் சந்திப்பின் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த தேர்தல் ஆணையாளர்;

இங்கே அரசாங்க நிதியில் நிர்மாணிக்கப்படும் வீதிகள், சில வேட்பாளர்களால் திறக்கப்படுகின்றனவெனத் தெரிவித்த அவர், அதனை உடனடியாக நிறுத்துமாறு, தான் உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும் கூறினார்.

“தேர்தல் கடமைகளில் பொலிஸார் மாத்திரமே கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் இராணுவத்தினர் எக்காரணத்துக்காகவும் கடமையில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள்.

அதாவது எமக்கு ஒரே ஒரு விடயத்துக்கு தான் இந்த இராணுவத்தினரை உதவி தேவைப்படு கின்றது. அதாவது தீவுப் பகுதிகளில் இருந்து விரைவாக வாக்குப் பெட்டிகளை வாக்குச் சேகரிப்பு நிலையத்துக்கு எடுத்து வருவதற்கு விமானப்படை மற்றும் கடற்படையினரின் உதவி நமக்கு தேவை யாக உள்ளது.

எனவே வாக்குப் பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையத்துக்கு எடுக்கும் பணியில் மட்டும் இராணுவத்தினர் பயன்படுத்தபடுவார்கள். தேர்தல் கடமைகள் அனைத்திலும் பொலிஸார் மாத்திரமே கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள்” என்றும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version