பொதுத் தேர்தல் தொடர்பான மனிதவுரிமை மீறல்களை பதிவு செய்கிறோம்

எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெறும் மனிதவுரிமைகள் மீறல் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவில் புதிய அலகொன்று நிறுவப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

முறைப்பாடுகளை 24 மணிநேரமும் பதிவு செய்யக்கூடியவகையில் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மனிதவுரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.1996 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு முறைப்பாட்டாளர்கள் தமது முறைப்பாடுகளை பதிவுசெய்யமுடியும்.

முறைப்பாடுகளை எழுத்துமூலம் சமர்ப்பிப்பதாயின்

அலகுப் பொறுப்பு அதிகாரி,
தேர்தல் முறைப்பாட்டைப் பெற்றுக்கொள்ளும் அழகு,
இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழு,
இல. 16,ஆர்.ஏ த மெல் மாவத்தை,
கொழும்பு 04.

என்ற முகவரிக்கு முறைப்பாடுகளை அனுப்பிவைக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. அத்துடன் 011 2505574 என்ற தொலைநகல் இலக்கத்திற்கோ அல்லது  [email protected] என்ற மின்னிஞ்சலுக்கோ முறைப்பாடுகளை அனுப்பிவைக்கலாம் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கடந்தகால செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் நம்பிக்கை இழந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெறும் கண்துடைப்பாகவே பார்க்கப்படுகிறது.