ஏழாலை தாக்குதல் சம்பவம்: காவல்துறையினருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை

ஏழாலை தாக்குதல் சம்பவம்

யாழ்ப்பாணம் – ஏழாலை தாக்குதல் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தப்பிக்க விடப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு காவல் துறையினருக்கு அழைப்பு விடுத்துள்ளது.

யாழ்.மாவட்டத்தின் ஏழாலை பகுதியில் கடந்த 04 ஆம் திகதி இரவு வீடொன்றினுள் புகுந்த சிலர் அங்கிருந்தவர்களை தாக்கியுள்ள சிசிடிவி காட்சிகள் வெளியிடப் பட்டிருந்தது. அத்தோடு தாக்குதல் மேற்கொண்டவர்களை சிலர் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கு  அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வட மாகாண பொறுப்பதிகாரி தங்கவேல் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, எதிர்வரும் 8 ஆம் திகதி ஆணைக்குழுவில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ilakku-weekly-epaper-150-october-03-2021