Home செய்திகள் தமிழினப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணாமல் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த முடியாது -சிவாஜிலிங்கம்

தமிழினப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணாமல் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த முடியாது -சிவாஜிலிங்கம்

sivajilinga தமிழினப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணாமல் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த முடியாது -சிவாஜிலிங்கம்

தமிழினப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணாமல் எந்த விற்பன்னர்களாளும் இலங்கையின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த முடியாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம்  தெரிவித்துள்ளார்.

பசில் ராஜபக்ஷ  நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ளது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது,

நிதியமைச்சராக திரு பசில் ராஜபக்ஷ   பொறுப்பேற்றால் என்ன எவர் பொறுப்பேற்றால் என்ன இலங்கையினுடைய பொருளாதாரம் அகல பாதாளத்தை நோக்கி பயணிக்கிறது.

இதை தூக்கி நிறுத்துவது என்பது இலகுவான விடயமல்ல. இதைவிட ஐரோப்பிய யூனியன் ஜி.எஸ்.டி பிளஸ் சலுகை போன்றவற்றை இரத்து செய்ய எடுக்கின்ற நடவடிக்கைகள் மத்தியிலே சீன சார்புடன் இவர்களால் பொருளாதாரத்தை முழுமையாக கட்டியெழப்ப முடியாது. அல்லது இவர்கள் முழுமையாக  இலங்கையை சீனாவிடம் ஒப்படைத்துவிட்டு பொருளாதாரத்தை முன்னேற்றலாம். அதனால் இலங்கை சர்வதேச அரங்கில் இருந்து அந்நியப்பட்டு பாரதூரமான விளைவுகளை எதிர்நோக்க வேண்டி வரும். அத்துடன் மேற்குலகின் பொருளாதாரத் தடைகளையும் இலங்கை சந்திக்க வேண்டி ஏற்படலாம்.

ஆகவே இலங்கையில் இனப்பிரச்சினைக்கு உறுதியான தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை வழங்காத வரையில், பொருளாதாரத்தை எந்த விற்பன்னர்களாலும் தூக்கி நிறுத்த முடியாது” என்றார்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

Exit mobile version