இலங்கையில் நிலவும் பொருளியல் நெருக்கடி அடுத்த ஆண்டுகளில் இந்தியாவிலும் நிகழும்- சீமான்

இலங்கையில் நிலவும் பொருளியல் நெருக்கடி

இலங்கையில் நிலவும் பொருளியல் நெருக்கடி அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவிலும் நிகழும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், “ஒவ்வொரு தேர்தலின் போதும் 5,000 கோடி வரை செலவு செய்கிறார்கள், 6,500 கோடி முதலீடு கொண்டு வந்ததாக கூறுகிறார்கள். இது பெரியவர்கள் விளையாட்டு, இதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கப்பலில் வந்தவர்களை விரட்டிவிட்டு வானூர்தியில் வருகிறவர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கிறார்கள் – லுலு மார்க்கெட் முழுவதும் வட இந்தியவர்கள் தான் வேலை செய்ய போகிறார்கள். அரசியலையும் வட இந்தியர்களே தீர்மானிப்பார்கள். இது முற்றிலும் பேராபத்தை நோக்கி செல்லும்.

நீட் விலக்கு தொடர்பாக குடியரசு தலைவரை முதல்வர் சந்திக்க வேண்டும். ‘உங்களில் ஒருவன்’ என்கிற புத்தகத்தை முதல்வர் எழுதி தென் மாநிலங்களில் உள்ள பல மாநில முதல்வர்களை அழைத்து வெளியிட்டார். அதேபோல, எல்லோரையும் அழைத்து மாநில சட்டப்பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றி நீட் தேர்வுக்கு எதிரான மாநாடு ஒன்றை முதல்வர் நடத்தலாம்.

இலங்கையில் இப்போது பொருளாதார நெருக்கடியால், இரண்டு ஆப்பிள் 450 ரூபாய் என்றால் அதே நிலை இங்கும் வரும். ஏனென்றால் நாம் ஏற்றுக் கொண்டுள்ள பொருளாதாரக் கொள்கை அப்படி உள்ளது” என்றார்.