பொருளாதார நெருக்கடி: மருத்துவர்கள், பொறியியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்?

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மருத்துவர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள் உட்பட ஆயிரக்கணக்கான தொழில் வல்லுநர்கள் வெளிநாடு செல்லத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

இவர்கள் ஏற்கனவே பல்வேறு தொழில்களுக்கு வெளிநாடுகளில் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பெருமளவிலான தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறினால் அது நாட்டின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மருத்துவப் பட்டப்படிப்பைக் கற்கும் இளைஞர்கள் இறுதிப் பரீட்சை எழுதியதன் பின்னர் இங்கிலாந்தில் வேலைக்குத் தேவையான பரீட்சைக்குத் தோற்றுவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

Tamil News