கிழக்கு கொள்கலன் முனைய அபிவிருத்தி இன்று ஆரம்பம்

கிழக்கு கொள்கலன் முனைய அபிவிருத்திகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனைய அபிவிருத்தி  வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக துறைமுக அமைச்சரான ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் அனுசரணையுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

கிழக்கு கொள்கலன் முனையம் 1,320 மீற்றர் நீளத்துக்கு நீடிக்கப்படும் என்றும், முழு முனையம் 75 ஹெக்ரேயர் பரப்பளவில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

2024 ஜூலை 4 ஆம் திகதிக்குள் இத்திட்டம் நிறைவடையும் என்றும், முழு திட்டமும் கால அட்டவணையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவுள்ளது என்றும், கிழக்கு கொள்கலன் முனையம் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.