மலேசியா: வெளிநாட்டு வீட்டு உதவியாளர்களிடம் அதிகமான குடிவரவு கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? 

அதிகமான குடிவரவு கட்டண

மலேசியாவில் பணியாற்ற வரும் வெளிநாட்டு வீட்டு உதவியாளர்களுக்கான முதல் முறை குடிவரவு கட்டணம் 1,136 மலேசிய ரிங்கட்டுகள் (சுமார் 20 ஆயிரம் இந்திய ரூபாய்/ 54 ஆயிரம் இலங்கை ரூபாய்) என மலேசிய குடிவரவுத்துறையின் இயக்குனர் ஜெனரல் கைரூல் டஸ்மி தவுத் தெரிவித்திருக்கிறார். 

வெளிநாட்டு வீட்டு உதவியாளர்கள் பணி நியமனத்திற்கு அதிகமான குடிவரவு கட்டணத்தை மலேசிய குடிவரவுத்துறை பெறுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து இவ்விளக்கத்தை குடிவரவுத்துறையின் இயக்குனர் ஜெனரல் கைரூல் டஸ்மி தவுத் வழங்கியிருக்கிறார்.

விசா கட்டணம், வரிகள் என அத்தனை விதமான பரிசீலனை கட்டணங்களை இந்த முதல் முறை குடிவரவு கட்டணத்திலேயே உள்ளடங்கும் என அவர் தனது செய்திக்குறிப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.

இலங்கை, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா, நேபாளம், லாவோஸ் என எங்கிருந்து வேண்டுமானாலும் வீட்டு உதவியாளர்களை தேர்ந்தெடுக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. அத்துடன் வீட்டு உதவியாளர்களை இந்த நாட்டிலிருந்து தான் தேர்ந்தெடுக்க வேண்டும் போன்ற எந்த கட்டுப்பாடுகளையும் வேலைக்கு அமர்த்த விரும்புபவர்களுக்கு மலேசிய அரசு விதிக்கவில்லை.

கடந்த 2021 டிசம்பர் 31ம் திகதி கணக்குப்படி, 88,173 வெளிநாட்டு வீட்டு உதவியாளர்கள் மலேசியாவின் தற்காலிக பணி பாஸ்களை (Temporary Working Visit Passes) கொண்டிருக்கின்றனர்.

Tamil News