சிறுபான்மையினருடன் இணைய ஜே.வி.பிக்கு விருப்பமில்லையா? மனோ கணேசன் கேள்வி

ஜே.வி.பிக்கு விருப்பமில்லையா
சிறுபான்மையினருடன் இணைந்து செயற்பட ஜே.வி.பிக்கு விருப்பமில்லையா? என்று தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல் சீர்திருத்தம் தொடர்பில் சிறுபான்மைக் கட்சிகளின் கருத்தாடல் நேற்று கொழும்பில் இடம்பெற்றபோது அவர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.

நேற்றைய நிகழ்வுக்கு ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதும் அவர்கள் வராத நிலையிலேயே மனோ கணேசனினால் கேள்வி எழுப்பப்பட்டது.

இதேவேளை, நாட்டில் நிறைவேற்று அதிகாரம் உள்ளது. அது 20ஆவது திருத்தத்தின் ஊடாக வலுப்பெற்றுள்ளது. இந்த நிலையில், பாராளுமன்றத்தில் சிறுபான்மைக் கட்சிகளின்,சிறுக்கட்சிகளின் கருத்துக்கள் பிரதிபலிக்க வேண்டும்.இது இல்லாதபோது ஏகாதிபத்தியவாதம் தலைதூக்கும் என்றும் மனோ கணேசன் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் தொகுதிக்கு பொறுப்புக்கூற கூடியவராக இருக்கக்கூடாது.அவர் நாட்டுக்கு பொறுப்புக்கூறக்கூடியவராக இருக்க வேண்டும்.தேர்தலில் விருப்புத்தெரிவு என்பது அவசியமானது. இதன்போதே மக்களின் ஜனநாயகம் பாதுகாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் சீர்திருத்தங்கள் உள்ளுராட்சி சபை, மாகாணசபை மற்றும் பாராளுமன்றம் என்ற அனைத்து சபைகளுக்கும் ஒருங்கே கொண்டு வரப்படவேண்டும் என்றும் மனோ கணேசன் குறிப்பிட்டார்.

  ilakku Weekly Epaper 153 october 24 2021 Ad சிறுபான்மையினருடன் இணைய ஜே.வி.பிக்கு விருப்பமில்லையா? மனோ கணேசன் கேள்வி