காணி சுவீகரிப்பில் ஈடுபடும் துறைமுக அதிகார சபையினர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கப்பல்துறை கிராமம் | ஹஸ்பர் ஏ ஹலீம்

கப்பல்துறை கிராமம்

ஹஸ்பர் ஏ ஹலீம்

கப்பல்துறை கிராமம்-காணி சுவீகரிப்பு

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திரு கோணமலை பட்டினமும் சூழலும் உள்ள பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கிராமமே கப்பல் துறை கிராமம். கண்டி – திருகோணமலை பிரதான வீதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தொலைவில் இக் கிராமம் அமைந்துள்ளது. மக்களின் அன்றாட ஜீவனோபாய தொழிலாக கூலித் தொழில், மழையை நம்பிய விவசாயம், வீட்டுத் தோட்ட பயிர்ச் செய்கை என்பன சிறந்து விளங்குகின்றன.

ஆனாலும் ஆரம்ப காலம் தொட்டு வாழ்ந்துவந்த இக் கிராம மக்களின் பூர்வீகத்தை தற்போது துறை முக அதிகார சபைக்கு சொந்தமான காணி எனக்கூறி குடியிருப்புக்களை விட்டு வெளியேறுமாறு கூறி வரும் துறைமுக அதிகார சபையினரின் எச்சரிக்கை யால் அக் கிராம மக்கள் அதிருப்திக்கு உள்ளாக்கப் பட்டுள்ளார்கள்.

குடிசைகள் தகரக் கொட்டில்கள் கல் வீடு களில் சுமார் 500 க்கும் மேற்பட்ட தமிழ், முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்து வந்தாலும், மக்களின் தற் போதைய நிலையினை வைத்து துறைமுக அதிகார சபை காணிகளை அடாத்தாக அபகரிக்க முடிவதை ஏற்றுக் கொள்ள முடியாது. சிறுபான்மை சமூகம் எங்கிருக்கிறதோ அங்கெல்லாம் இந்த அரசகாணி என்ற போர்வையிலும், தொல் பொருள் என்ற போர் வையிலும் தனியார் மக்களுடைய காணிகளை அபகரிக்க முற்படுகின்றனர். திருகோணமலை மாவட்டத்தை பொறுத்தமட்டிலும் இவ்வாறான நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். தற் போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் குடியிருப்பு காணிகளை விட்டு வெளியேறா விட் டால் வீட்டை இயந்திரத்தை கொண்டு இடித்து தள்ளுவோம் என்று கூறி, துறைமுக அதிகார சபை ஊழியர்கள் அங்கு சென்று அம்மக்களை பதற்ற நிலைக்கு தள்ளியுள்ளனர் இதனால் அக் கிராம மக்கள் அப் பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை 05.06.2022 ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில் கலந்து கொண்ட முதியவர் ஒருவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். “சுமார் ஐம்பது வருட காலமாக குடியிருந்து வந்த மக்களுக்கு சொந்தமான காணியை துறைமுக அதிகார சபையி னர் வந்து தாங்கள் வசிக்கும் குடியிருப்பு காணியை விட்டு எழும்புமாறு பல முறை எச்சரித்து விட்டுச் சென்றனர்.

1994 ம் ஆண்டு காலப் பகுதியில் முன்னாள் ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா அம்மையார் காலத்தில் அப்போதைய கப்பல் துறை, புனர்வாழ்வு அமைச்சராக இருந்த மறைந்த மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களினால் குறித்த கிராமத்தில் மக்கள் மீள் குடியேற்றப்பட்டார்கள். தற்போது துறைமுக அதிகார சபையினர் பலவந்தமாக காணி க்குள் புகுந்து வெளியேறுமாறு மக்களிடத்தில் கூறுகின்றனர். இந்த காணியை விட்டு வெளியேற முடியாது. இதனை விட்டு வெளியேறி எங்கே செல்வது என மக்கள் வினாவுகின்றனர். துறைமுக அதிகார சபையினர் அடாத்தாக அடிக்கடி தங்களது பகுதிக்குள் வந்து வெளியேறுமாறு கோருகின் றனர். இல்லாது போனால் வீட்டை உடைத்து தள்ளு வதாகவும் கூறுகின்றனர். சுமார் 17 வருடங்கள் தொடர்ந்தும் இந்த கிராமத்தில் வாழ்ந்து வருகி றோம். இதனை விட்டு வெளியேறி நாம் எங்கே செல்வது” எனவும் அப் பகுதி முதியவர் கேள்வி எழுப்புகின்றார்.

“கிராம சேவகரின் அனுமதியின் பின்பே காணியில் வீடு அமைக்கப்பட்டு குடியிருக்கிறோம். தற்போது வீட்டை உடைத்து காணியை அபகரிக்க துறைமுக அதிகார சபையினர் அத்துமீறுவது சரியா? அரசாங்க அதிகாரிகளின் அறிவிப்புக்கு பின்னரே 17 வருடங்களாக வாழ்ந்து வருகிறோம். இப்போது காணியை விட்டு எழும்ப சொன்னால் எங்கே போவது, எங்களுக்கு நீதி வேண்டும். இதுவும் ஒடுக்கு முறையா எங்களது வயிற்றில் அடி ப்பதா அரசின் நோக்கம் எனவும் பதாகைகளை ஏந்தியவா றும் காணியை அபகரிக்காதே அபகரிக்காதே என்ற கோசங்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பினர். சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இதில் கலந்து கொண்டதுடன் துறைமுக அதிகார சபையினரின் இவ்வாறான அடாத்தான நடவடிக் கையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருமாறும் நீதியை நிலை நாட்டுமாறும் உரிய அதிகாரிகளி டத்தில் அம் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அரசாங்க அனுமதியின்படியே இக் கிராம மக்கள் அன்றைய கால கட்டம் மாதிரிக் கிராமமாக குடியேற்றப்பட்டார்கள். பாடசாலை, தபாலகம், கிராமிய வைத்தியசாலை என அரச கட்டிடங்கள் கூட இங்கு சேவையில் உள்ள நிலையில் துறைமுக அதிகார சபை காணிகளை சுற்றி SLPA என்ற வாசகம் அடங்கிய எல்லைக் கல் இட்டும் “இக் காணி துறை முக அதிகார சபைக்கு சொந்தமானது. அனுமதியி ன்றி உட்பிரவேசிக்க வேண்டாம்” போன்ற வாசகங் களும் கொண்ட பதாகை இடப்பட்டுள்ளது.அம் மக்கள் நீர் மின்சாரம் ஆரம்ப பதிவு என அக் கிரா மத்தில் உள்ள விலாசத்தை வைத்தே வாழ்ந்து வரும் நிலையில் இவ்வாறான காணி அபகரிப்பை மேற்கொள்வதை ஒரு போதும் ஏற்க முடியாது. பொருளாதார நெருக்கடிக்குள்நொந்துபோய் வாழ் ந்து வரும் இம் மக்களின் அன்றாட ஜீவனாம்சமே கேள்விக்குறியாகியுள்ளநிலையில், இவர்களை காப்பாற்றுவது அரசின் கடமையல்லவா? அதை விடுத்து அதிகாரத்தை அப்பாவி மக்கள் மீது சுமத்தி துறைமுக அதிகார சபையினர் அப்பகுதியில் நுழைந்து மக்களை எச்சரிக்கையூட்டுகின்றனர்.

“2000ம் ஆண்டுக்கு முன் மண் வீடு குடிசையில் வாழ்ந்து வந்த நிலையில் எனக்கு தனியார் மூலமாக வீடு கட்டி கொடுக்கப்பட்டது. ஆரம்பம் தொடக்கம் அந்த வீட்டில் வசித்தே திருமணம் முதல் பிள்ளைகளை பெற்று வாழ்ந்த நிலையில் இப்போது வெளியேறச் செல்கிறார் கள் வரி நீர் மின்சாரம் போன்ற பட்டியல் கட்டணம் செலுத்தி வருகிறேன் கள்ளத்தனமாக குடியேற வில்லை கிராம அதிகாரி மூலமாகவே குடியேறி னேன். எனக்கு இந்த பூர்வீக குடியேற்றத்தை விட்டு வெளியேற முடியாது. பிரதமர் ஜனாதிபதி தீர்வினை தரவேண்டும் இல்லாது போனால் குடும்பத்துடன் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிப்பேன்” என பாதிக்கப்பட்ட கிரா மவாசி ஒருவர் தெரிவித்தார்.

இவ்வாறான சோகமான நிலைமைக்குள் ளாகியுள்ள பாடசாலை செல்லும் மாணவர்கள் உட்பட குடும்பங்களை புறக்கணிப்பது ஜீரணிக்க முடியாத ஒன்றாக விளங்குகிறது. அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கது. மக்களை நிம்மதியாக வாழ்வதற்கு வழி செய்ய வேண்டும். அவர்களுக்கான உரிமைகளோடும் சுதந்திரத்தோடும் வாழ வழி சமைக்க வேண்டும். இப்படியான துறைமுக அதிகார சபையினரின் அடாவடித்தனக்கள் இனிமேலும் இடம் பெறாத வண்ணம் கப்பல் துறை கிராமம் இருக்க வேண்டும் என்பதை அம் மக்கள் விரும்புகின்றனர்.

இது மாத்திரமல்ல திருகோணமலை மாவ ட்டத்தில் வாழும் சிறுபான்மை சமூகத்தின் காணி களை வேறு இடங்களிலும் இலங்கை சுற்றுலாத் துறை பணியகம், வனஜீவராசிகள் திணைக்களம் போன்றனவும் காணியை சுவீகரிப்புச் செய்துள்ளன. யுத்த சூழ்நிலையின் பின் மக்கள் நிம்மதியாக வாழ் ந்து வந்த நிலையில் சமூக நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் வண்ணம் செயற்படுகின்றனர்.

தொல்பொருள் என்கின்ற போர்வையிலும் காணி சுவீகரிப்பு இடம் பெறுகிறது. அப்பாவி மக்களின் காணிகளை இவ்வாறாக துறைமுக அதிகார சபை ஊழியர்களின் தொடர்ச்சியான அச்சு றுத்தல் மூலமாக நிம்மதியாக குடியிருப்பு பகுதி யில் வாழ முடியாது எனவும் ஒரு கிழமைக்கு குறை ந்தது இரு தடவையேனும் கிராமத்துக்குள் வருகைதருவதாக தெரிவிக்கின்றனர்.

இக் கிராம மக்களின் நிலை அறிந்து காணி களை கையகப்படுத்தாதளவுக்கு அவர்களுடைய பூர்வீகமான இடங்களில் வாழ்வதற்கான வசதி களை தொடர்ந்தும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கான முயற்சிகளை உரிய அரசாங்க தரப்புக்கள் நடவடி க்கை எடுக்க வேண்டும் என்பதே அக்கிராம மக்க ளின் ஒரேயொரு கோரிக்கையாகும்.

Tamil News