Tamil News
Home உலகச் செய்திகள்  மலேசியாவில் தஞ்சமடைந்துள்ள அகதிகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 

 மலேசியாவில் தஞ்சமடைந்துள்ள அகதிகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 

மலேசிய பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட தகவலின்படி, அந்நாட்டில் மொத்தம் 59 நாடுகளைச் சேர்ந்த 182,990 அகதிகள், புகலிடக்கோரிக்கையாளர்கள் உள்ளனர். 

இதில் 74 சதவீதம் பேர்- 135,440 பேர் அங்கீகரிக்கப்பட்ட அகதிகளாக உள்ளனர், மற்ற அனைவரும் புகலிடம் கோரியவர்களாக உள்ளனர். இதில் 86.43 சதவீதம்- 158,165 பேர் மியான்மர் நாட்டு அகதிகளாக/ புகலிடக் கோரிக்கையாளர்களாக உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் கணக்குப்படி, மலேசியாவில் உள்ள ஒட்டுமொத்த அகதிகள் எண்ணிக்கையில் 58 சதவீதம் பேர் ரோஹிங்கியா அகதிகளாவர்.

அதே சமயம், பாகிஸ்தானிலிருந்து வெளியேறிய 6,876 பேர், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 3,391 பேர், ஏமனை சேர்ந்த 3,346 பேர், சோமாலியாவை சேர்ந்த 3,3033 பேர், சிரியாவைச் சேர்ந்த 2,809 பேர், இலங்கையைச் சேர்ந்த 1,507 பேர், ஈராக்கை சேர்ந்த 750 பேர், பாலஸ்தீனத்தை சேர்ந்த 639 பேர், ஈரானில் இருந்து வெளியேறிய 393 பேர், சூடான் நாட்டவர்கள் 278 பேர், மற்றும் இன்னும் பிற நாடுகளைச் சேர்ந்த 1,803 பேர் மலேசியாவில் அகதிகளாக/புகலிடக் கோரிக்கையாளர்களாக உள்ளனர்.

Exit mobile version