Tamil News
Home செய்திகள் “தடுத்து வைப்பதற்கான உத்தரவில் கையொப்பமிட வேண்டாம்“ – ஐநாவின் விசேட அறிக்கையாளர்

“தடுத்து வைப்பதற்கான உத்தரவில் கையொப்பமிட வேண்டாம்“ – ஐநாவின் விசேட அறிக்கையாளர்

மனித உரிமை செயற்பாட்டாளர்களான வசந்த முதலிகே, ஹஷான் ஜீவந்த மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை தடுத்து வைக்கும் உத்தரவில் கையெழுத்திட்டால் அது இலங்கையின் கறுப்பு நாளாக அமைந்துவிடும் என மனித உரிமை பாதுகாவலர்கள் தொடர்பிலான ஐநாவின் விசேட அறிக்கையாளர் மேரி லோலர்(Mary Lawlor) வலியுறுத்தியுள்ளார்.

குறித்த மூவரையும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பதற்கான உத்தரவில் கையொப்பமிட வேண்டாம் என அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையின் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தாம் மிகவும் கவலையடைவதாக மனித உரிமை பாதுகாவலர்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Exit mobile version