வடக்கின் தீவுகளை சீனாவுக்கு கொடுத்தால் விமர்சிக்காதீர்கள்-ஜெனரல் கமல் குணரத்ன

வடக்கின் தீவுகளை சீனாவுக்கு கொடுத்தால்

வடக்கின் மூன்று தீவுகளை சீனாவுக்கு கொடுக்கும் எந்தவித நோக்கமும்  அரசாங்கத்திடம் இல்லை.  ஆனால் முதலீடுகளின் போது சர்வதேச நாடுகளை தெரிவு செய்யும் வேளையில் தெரிவாவது சீன நிறுவனம் என்றால் அதனை எவரும் தவறான விதத்தில் விமர்சிக்கக்கூடாது என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாடுகளுடன் முன்னெடுக்கும் உடன்படிக்கைகளினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றால் அதனை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி அனுமதிக்க மாட்டார் எனவும் கமல் குணரத்ன கூறியுள்ளார்.

கடந்த ஈராண்டு காலத்தில் முப்படையினரின் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கும் விதமாக ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கவந்துகொண்ட போதே பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்தன வடக்கின் தீவுகளை சீனாவுக்கு கொடுத்தால் விமர்சிக்காதீர்கள் என்று கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், இலங்கையுடன் ஏதேனும் சர்வதேச உடன் படிக்கைகள் செய்துகொள்ளும் வேளையில், அந்த உடன்படிக்கை மூலமாக நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதா என்பது குறித்த அரச அதிகாரிகளாகவும் அல்லது ஓய்வு பெற்ற அதிகாரியாக இருக்கும் காலத்திலும் எமது கவனத்தை செலுத்தி வருகின்றோம்” என மேலும் தெரிவித்தார்.

ilakku Weekly Epaper 160 December 12 2021 Ad வடக்கின் தீவுகளை சீனாவுக்கு கொடுத்தால் விமர்சிக்காதீர்கள்-ஜெனரல் கமல் குணரத்ன