Home செய்திகள் ஊடகர்களை தாக்காதே கிண்ணியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

ஊடகர்களை தாக்காதே கிண்ணியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

கிண்ணியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

ஊடகவியலாளர்களின் தாக்குதலை கண்டித்து கிண்ணியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று  இடம் பெற்றது. குறித்த கவனயீர்ப்பானது திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள பேருந்து தரிப்பிட முன்றலில் இடம் பெற்றது.

ஊடகத்தில் கை வைக்காதே, ஊடகவியலாளர் மீதான தாக்குதலை கண்டிக்கிறோம் உள்ளிட்ட பதாகைகளை ஏந்தியவாறு  ஊடகவியலாளர்கள்  இக்கவனயீர்ப்பில்    ஈடுபட்டனர். திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கம் மற்றும் கங்கதலாவ ஐக்கிய ஊடக ஒன்றியம் இணைந்து இக்கவனயீர்ப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

கிண்ணியாவில் அண்மையில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான போது கிண்ணியா தளவைத்தியசாலையின் முன் அமைதியின்மை ஏற்பட்டது. இதன் போது செய்தி சேகரிக்கச் சென்ற இரு  ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையைக் கண்டித்தே இப் போராட்டம் இடம் பெற்றது. வடக்கில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பிலும் இப் போராட்டத்தின் போது எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதில் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த பல ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version