அகதிகளுக்கு அனுதாபம் காட்டுவதில் வேறுபாடு: சில அகதிகள் பிறரைக் காட்டிலும் அதிகமாக வரவேற்கப்படுவது ஏன்?

அகதிகள் என்றததும் இனப்படுகொலைக்கு பிந்தைய ருவாண்டா, போர் மேகம் சூழந்துள்ள சோமாலியா, கும்பல் வன்முறை நிறைந்த ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளிலிருந்து வெளியேறும் கறுப்பு மற்றும் மாநிற அகதிகளையே பெரிதும் அறிந்திருப்போம். ஐ.நா.வின் அகதிகள் ஆணையத்தின் 2021 முதல் பாதி கணக்குப்படி, 26.6 மில்லியன் அகதிகள் உலகெங்கும் உள்ளனர்.

இவ்வாறு உள்ள அகதிகளில் 1 சதவீத அகதிகள் மட்டுமே புதிய ஒரு நாட்டில் மீள்குடியமருவதற்கான உதவியைப் பெறுகின்றனர் என்கிறது Save the Children அமைப்பு.

கடந்த பெப்ரவரி மாதம், உக்ரைன் மீது ரஷ்யா இராணுவம் தாக்குதல் தொடங்கியது முதல் அங்குள்ள வலுக்கட்டாயமாக வெளியேறும் நிலைமைக்கு தள்ளப்பட்டனர். இவர்கள் வழக்கத்திற்கு மாறான வெள்ளை நிற அகதிகள்.

உக்ரேனுக்கு இராணுவ மற்றும் மனிதாபிமான உதவி செய்வதற்கு 40 பில்லியன் டொலர்கள் வழங்குவதற்கான மசோதாவை அமெரிக்க செனட் நிறைவேற்றியுள்ளது. ஐரோப்பிய யூனியன் 1 பில்லியன் யூரோக்கள் வழங்கியது. அகதிகளுக்கு என வழங்கப்பட்ட உதவிகள் உலக அரசாங்கங்களிடமிருந்து எதிர்பாராத ஒன்றாகும்.

அந்த வகையில், வெள்ளை நிற உக்ரேனிய அகதிகளை ஒரு மாதிரியும் கறுப்பு மற்றும் மாநிற அகதிகளை ஒரு மாதிரியும் இந்த உலகம் நடத்துகிறது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.

Tamil News