Home உலகச் செய்திகள் உக்ரேனில் 150 க்கும் மேற்பட்ட பாரம்பரிய தளங்கள் அழிப்பு – யுனேஸ்கோ

உக்ரேனில் 150 க்கும் மேற்பட்ட பாரம்பரிய தளங்கள் அழிப்பு – யுனேஸ்கோ

உக்ரேனில் பாரம்பரிய தளங்கள் அழிப்பு

ரஷ்யா மற்றும் உக்ரேனுக்கு இடையிலான போரில் உக்ரேனில் உள்ள 150-க்கும் அதிகமான பாரம்பரிய தளங்கள் ரஷ்யாவினால் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரேனில் பாரம்பரிய தளங்கள் அழிப்பு

லுகாஷிவ்காவில் உள்ள அசென்ஷன் தேவாலயம் ; NURPHOTO VIA GETTY IMAGES

ஐநாவைச் சேர்ந்த வல்லுநர்கள் இந்தத் தகவலை தெரிவித்துள்ளனர்.

அதில், 150-க்கும் அதிகமான பாரம்பரிய மற்றும் கலாச்சாரம் சார்ந்த தளங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ அழிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

சமூகக் கலை மையம் ; AFP VIA GETTY IMAGES

அழிக்கப்பட்டுள்ள தளங்களில் அருங்காட்சியகங்கள், நினைவுச் சின்னங்கள், தேவாலயங்கள் மற்றும் மதம் சார்ந்த கட்டடங்கள், நூலகங்கள் ரஷ்யப் படைகளால் தாக்கி அழிக்கப்பட்டன. இந்தத் தகவலை யுனெஸ்கோ உறுதிப்படுத்தியுள்ளது.

நோவோவனிவ்காவில் உள்ள செயிண்ட் ஒலெக்சாண்டர் தேவாலயம் ; SOPA IMAGES/LIGHTROCKET VIA GETTY IMAGES

இது குறித்து யுனெஸ்கோவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளதாவது,

“உக்ரேனின் கலாச்சாரம் சார்ந்த தளங்களில் ரஷ்யா தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும். எந்த ஒரு சூழலிலும் கலாச்சாரம் சார்ந்த தளங்களில் தாக்குதல் நடத்தக் கூடாது.” என்றார்.

உக்ரேன் தரப்பில், ரஷ்யா யுனெஸ்கோவில் இருந்து நீக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மாதம் ரஷ்யாவின் தலைமையில் நடைபெறவிருக்கும் உலக பாரம்பரியத் தளங்களுக்கான கூட்டத்தை தள்ளிவைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வரலாற்று செர்னிஹிவ் நூலகம் ; AGF/UNIVERSAL IMAGES GROUP VIA GETTY IMAGES

கார்கிவ் பிராந்தியத்தில் உள்ள ஸ்கோவோரோடினிவ்கா கிராமத்தில் உள்ள ஹிரிஹோரி ஸ்கோவரோடா தேசிய இலக்கிய நினைவு அருங்காட்சியகம் ; AFP VIA GETTY IMAGES

Exit mobile version