Home உலகச் செய்திகள் ஆய்வகங்களிலுள்ள ஆபத்தான நோய்க் கிருமிகளை அழித்திடுக: உக்ரைனுக்கு உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தல்

ஆய்வகங்களிலுள்ள ஆபத்தான நோய்க் கிருமிகளை அழித்திடுக: உக்ரைனுக்கு உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தல்

ஆபத்தான நோய்க் கிருமிகளை அழித்திடுக

ஆபத்தான நோய்க் கிருமிகளை அழித்திடுக

ரஷ்யப் படைகளால் உக்ரைன் தாக்கப்பட்டு வரும் சூழலில், அச்சுறுத்தலான நோய்ப் பரவலைத் தடுத்திடும் வகையில், அந்நாட்டின் சுகாதார ஆய்வகங்களில் உள்ள ஆபத்தான நோய்க்கிருமிகளை அழித்திட உக்ரைனுக்கு  உலக சுகாதார நிறுவனம் அறிவுறித்தியுள்ளது.

சிறப்பு “இராணுவ நடவடிக்கை” என்ற பெயரில் ரஷ்யா உக்ரைன் மீது பிப்ரவரி 24ம் நாளில் இருந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்தத் தாக்குதலில் உக்ரைனின் சுகாதார ஆய்வகங்கள் ஏதாவது தாக்கப்பட்டால், அங்கிருந்து அச்சுறுத்தலான நோய்களைப் பரப்பும் கிருமிகள் வெளியேறுவதற்கு வாய்ப்பிருப்பதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்த நிலையில், உக்ரைனின் சுகாதார ஆய்வகங்களில் உள்ள ஆபத்தான நோய்க் கிருமிகளை அழித்து விடுமாறு அந்நாட்டிற்கு உலக சுகாதார நிறுவனம்   அறிவுறுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version