அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலாளர் உயர் மட்ட தலைவர்களுடன் கலந்துரையாடல்

உயர் மட்ட தலைவர்களுடன் கலந்துரையாடல்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலாளர் கெல்லி கெய்டர்லிங் (Kelly Keiderling) உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்திருப்பதுடன் நாட்டின் உயர் மட்ட தலைவர்களுடன் கலந்துரையாடல் நடத்தவுள்ளார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலாளர் கெல்லி கெய்டர்லிங் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பணியகத்தின் பங்களாதேஷ், பூட்டான், மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கான பொது இராஜதந்திர துணைச்செயலாளராவார்.

கடந்த 2016 – 2019 ஆம் ஆண்டு வரை உருகுவே நாட்டிற்கான அமெரிக்கத் தூதுவராகவும் 2019 – 2021 ஆம் ஆண்டுவரை தேசிய போர்க்கல்லூரியில் பிரதிக் கட்டளைத் தளபதியாகவும் சர்வதேச விவகார ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் இலங்கை வந்துள்ள அவர், நாட்டின் பொருளாதாரம் முன்நோக்கிப் பயணிப்பதற்கான பங்களிப்பை வழங்கிவரும் ‘குட் மார்க்கெட்’ முயற்சி யாண்மையின் இணை ஸ்தாபகரை நேற்றைய தினம் சந்தித்துக் கலந்துரை யாடல்களை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.