Home செய்திகள் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டால் உயிரிழக்க நேரிடும்: அச்சத்தில் ரஷ்யப் பெண்

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டால் உயிரிழக்க நேரிடும்: அச்சத்தில் ரஷ்யப் பெண்

Lutmela 1 அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டால் உயிரிழக்க நேரிடும்: அச்சத்தில் ரஷ்யப் பெண்

ரஷ்யாவில் பிறந்த லுட்மிலா கோவலெவா அவுஸ்திரேலியாவில் ஒட்டகங்களைப் பராமரிக்க நேரிடும் என என்றும் நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால் தாய்நாடான ரஷ்யாவில் எதிர்கொண்ட சூழல் அந்த நிலைக்கு அவரை தள்ளியுள்ளது. 

மாஸ்கோவில் லுட்மிலா வசித்த போது அவரது கணவரான நிக்கோலஸ் ரஷ்யாவில் மிகவும் சக்திவாய்ந்தவர்களில் ஒருவரான முன்னாள் துணைப் பிரதமர் இகோர் ஷூவலோவுக்கான ஒப்பந்ததாரராக இருந்து வந்திருக்கிறார்.

ரஷ்ய அரசின் உயர்மட்ட அளவில் நிகழ்ந்த ஊழலை வெளிப்படுத்தியதன் காரணமாக ஏற்பட்ட அச்சுறுத்தலால் லுட்மிலா, அவரது கணவர் மற்றும் இரு குழந்தைகள் அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருக்கின்றனர்.

“அவர்கள் மன்னிக்கவும் மாட்டார்கள், மறக்கவும் மாட்டார்கள், நிச்சயமாக பழிவாங்குவார்கள். நான் உண்மையில் அவுஸ்திரேலியாவில் பாதுகாப்பாக உணர்கிறேன் – இது ரஷ்யாவிலிருந்து வெகுத்தூரத்தில் இருக்கிறது,” எனும் லுட்மிலாவின் அவுஸ்திரேலிய இணைப்பு விசா இன்னும் சில வாரங்களில் காலாவதியாக இருக்கிறது.

கடந்த பிப்ரவரி 2012ல் பாதுகாப்பு விசா வேண்டி கொடுக்கப்பட்ட இவர்களது விண்ணப்பம் அவுஸ்திரேலியாவால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் விசா நிராகரிக்கப்பட்ட அடுத்த ஒரு மாதத்தில் அவுஸ்திரேலிய புலம்பெயர்வு சட்டத்தில் கொண்ட வரப்பட்ட மாற்றத்தின் அடிப்படையில் இவர்களுக்கு உடனடியான பாதுகாப்பு விசா வழங்குவதற்கான வழி உள்ளது.

இந்த இறுக்கமான நிச்சயத்தன்மையற்ற வாழ்க்கைச் சூழல் விவாகரத்தை நோக்கி தன்னைத் தள்ளியதாகக் கூறுகிறார் லுட்மிலா. வேறு சில நாடுகளில் பாதுகாப்பான புகலிடம் வேண்டி தனது குடும்பத்தினர் பிரிந்துள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

லுட்மிலாவின் மகளான அன்யா ஸ்ட்ரைட் தனது குடும்பம் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என விரும்புகிறார்.

அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் ஆண்டூரு கில்ஸ் தலையிட்டால் நாடுகடத்தப்படுவதிலிருந்து தான் தப்புவதற்கான வாய்ப்பு உள்ளதாகக் கூறுகிறார் ரஷ்ய தஞ்சக்கோரிக்கையாளரான லுட்மிலா.

பல சிக்கலான புலம்பெயர்வு வழக்குகளைக் கையாள்பவரும் லுட்மிலாவின் வழக்கறிஞருமான சைமன் ஜீன்ஸ் என்பவர், இது பத்தாண்டுகளுக்கு முன்பே தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை என்கிறார்.

“எந்த அமைச்சராவது இவ்வழக்கை அறிந்திருந்தால் மீண்டும் பாதுகாப்பு விசாவுக்கு விண்ணப்பிக்க லுட்மிலாவை அனுமதித்திருப்பார்கள் அல்லது பாதுகாப்பு விசாவை வழங்கியிருப்பார்கள்,” என லுட்மிலாவின் வழக்கறிஞரான ஜீன்ஸ் தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version