திருகோணமலை கப்பல் துறை பகுதியில் குடியிருப்பு காணியை மீட்க கோரி ஆர்ப்பாட்டம்

குடியிருப்பு காணியை மீட்க கோரிய ஆர்ப்பாட்டம்

திருகோணமலை மாவட்டம் பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கப்பல் துறை கிராமத்தில் குடியிருப்பு காணியை மீட்க கோரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றது.

சுமார் ஐம்பது வருட காலம் தொட்டு குடியிருந்து வந்த மக்களுக்கு சொந்தமான காணியை துறை முக அதிகார சபையினர் வந்து தாங்கள் வசிக்கும் குடியிருப்பு காணியை விட்டு எழும்புமாறு பல முறை எச்சரிக்கப்பட்டதையடுத்து இந்த ஆர்ப்பாட்டமானது கப்பல் துறை அம்மன் கோயில் வீதியில் இடம் பெற்றது.

1994 ம் ஆண்டு காலப் பகுதியில் முன்னால் ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா அம்மையார் காலத்தில் அப்போதைய துறை முக அமைச்சராக இருந்த மறைந்த மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப்பினால் குறித்த கிராமத்தில் மக்கள் மீள் குடியேற்றப்பட்டார்கள். தற்போது துறை முக அதிகார சபையினர் பலவந்தமாக காணிக்குள் புகுந்து வெளியேறுமாறு மக்களிடத்தில் கூறுகின்றனர். இந்த காணியை விட்டு வெளியேற முடியாது இதனை விட்டு வெளியேறி எங்கே செல்வது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்  கேள்வி எழுப்புகின்றனர்.

IMG 20220605 WA0019 திருகோணமலை கப்பல் துறை பகுதியில் குடியிருப்பு காணியை மீட்க கோரி ஆர்ப்பாட்டம்

“இக் கிராமத்தில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். “கிராம சேவகரின் அனுமதியின் பின்பே காணியில் வீடு அமைக்கப்பட்டு குடியிருக்கிறோம். தற்போது வீட்டை உடைத்து காணியை அபகரிக்க துறை முக அதிகார சபையினர் அத்துமீறுவது சரியா??, அரசாங்க அதிகாரிகளின் அறிவிப்புக்கு பின்னரே 17 வருடங்களாக  வாழ்ந்து வருகிறோம். இப்போது காணியை விட்டு எழும்ப சொன்னால் எங்கே போவது, எங்களுக்கு நீதி வேண்டும் , இதுவும் ஒடுக்கு முறையா எங்களது வயிற்றில் அடிப்பதா அரசின் நோக்கம்” எனவும் பதாகைகளை ஏந்தியவாறும் காணியை அபகரிக்காதே அபகரிக்காதே என்ற கோசங்களையும் இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பினர்.

Tamil News