Home செய்திகள் இரண்டு தடுப்பூசிகள் ஏற்றினாலும் டெல்டா தொற்று பரவும்- சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

இரண்டு தடுப்பூசிகள் ஏற்றினாலும் டெல்டா தொற்று பரவும்- சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

download 1 2 இரண்டு தடுப்பூசிகள் ஏற்றினாலும் டெல்டா தொற்று பரவும்- சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

தடுப்பூசி நடவடிக்கைகள் முழுமையாக முன்னெடுக்கப்பட்ட போதிலும் டெல்டா தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக இலங்கை சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.

தெமட்டகொட மாளிகாவத்தை கொழும்பு வடக்கில் டெல்டா கொரோனா வைரஸ் ஆபத்து அதிகமாக காணப் படுகின்றது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டெல்டா கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட மேலும் 38 பேர் அடையாளம் காணப் பட்டுள்ளனர் என்றும்  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,  தற்போது இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டவர்களும் தொற்றுக்கு உள்ளாகும் நிலைமை காணப்படுவதாகவும் இலங்கை சுகாதார மேம்பாட்டுப்  பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரஞ்சித் சுட்டிக் காட்டினார்.

ஆகவே மக்கள் அனைவரும் சுகாதார வழிகாட்டுதல்களை அவசியம் கடைப் பிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இலங்கையில்  படிப்படியாக சுகாதாரக் கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட்டாலும் தொற்றின் நிலைமையைக் கருத்திற் கொண்டு மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடையை தளர்த்துவது அல்லது நீடிப்பது குறித்து அறிவிக்கப் படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

டெல்டா மாறுபாடு அதிகரிக்கும் பட்சத்தில் மேலதிக கட்டுப்பாடுகளை அமுல் படுத்துவதற்கான வாய்ப்புகள் காணப் படுவதாகவும் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டவர்களது எண்ணிக்கை 283,512 ஆக உயர்வடைந்து ள்ளமையும் இதுவரை 3,733 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

Exit mobile version