Tamil News
Home செய்திகள் பிலிப்பைன்ஸை தாக்கிய புயல்- 70க்கும் மேற்பட்டோர் பலி

பிலிப்பைன்ஸை தாக்கிய புயல்- 70க்கும் மேற்பட்டோர் பலி

கடுமையான வெப்பமண்டல புயல் பிலிப்பைன்ஸை தாக்கியதில் தென் மாகாணங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி   70க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

மேலும், 33 பேர் காயமடைந்துள்ளதாகவும், 14 பேர் காணாமல் போயுள்ளதாகவும் நாட்டின் பேரிடர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மிண்டனாவ் தீவில் உள்ள மகுயின்டானாவ் மாகாணத்தில், ‘நல்கே’ புயல் மிகவும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. கோடாபாடோ நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

வெப்பமண்டல புயல், மணிக்கு அதிகபட்சமாக 95கிமீ (59 மைல்) வேகத்தில் காற்று வீசுவதுடன், மணிக்கு 160கிமீ (99.4 மைல்) வேகத்தில் காற்று வீசியது, இது சனிக்கிழமை அதிகாலை கிழக்கு கேடன்டுவான்ஸ் மாகாணத்தில் கரையை கடந்தது.

தினமும் பலர் படகில் பயணம் செய்யும் தீவுக்கூட்டத்தின் பெரும்பகுதியில் படகு சேவையை கடலோர காவல்படை நிறுத்தியுள்ளது. கடலோர காவல்படையினர் பலரை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றி வருகின்றனர்.

வியாழக்கிழமை முதல் பலத்த மழை பெய்யத் தொடங்கியது, இந்த வார இறுதியில் புயல் அதன் உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version