Home உலகச் செய்திகள் கனடாவைத் தாக்கிய புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கனடாவைத் தாக்கிய புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கனடாவின் மேற்கு மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஏற்பட்ட புயலின் பாதிப்பால் அங்கு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும்  தொடரூந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.  

கனடாவின் பிரிட்டிஷி கொலம்பியா மாகாணத்தை ஞாயிறன்று தாக்கிய புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில், ஆங்காங்கே சிக்கியுள்ள மக்களை மீட்க கனடாவின் ஆயுதப்படையினர் பணியில் அமர்த்தப் பட்டுள்ளனர்.

தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் மேலும் இருவரை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version