காமன்வெல்த் நிறுவன மற்றும் முதலீட்டு கவுன்சில் (CWEIC) தனது தலைமை அலுவலகத்தை இலங்கையில் ஸ்தாபிப்பதாக அறிவித்துள்ளது.
இது இலங்கையில் வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேம்படுத்துவதற்கான காமன்வெல்த் முயற்சிகளில் ஒரு முக்கிய இடத்தைபெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த மூலோபாய முயற்சியானது, பொதுநலவாய உறுப்பு நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேம்படுத்தும் அதே வேளையில் வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
காமன்வெல்த் எண்டர்பிரைஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் கவுன்சில் Commonwealth Enterprise and Investment Council (CWEIC) என்பது காமன்வெல்த் வணிக வலையமைப்பு ஆகும், இது அதன் உறுப்பு நாடுகளிடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக நிறுவப்பட்டது. காமன்வெல்த்தின் 56 உறுப்பு நாடுகளில் பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை மேம்படுத்துவதற்காக வணிகங்களையும் அரசாங்கங்களையும் CWEIC ஒன்றிணைக்கிறது.