விடுதலைப் புலிகளின் தற்போதைய ஆயுதம் இதுதான்- வெளிவிவகார அமைச்சின் செயலாளர்

புலிகளின் தற்போதைய ஆயுதம்தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை மண்ணில் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டாலும் வெளிநாடுகளில் அந்த அமைப்பு செயற்படுகின்றது என
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட் மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். அத்தோடு, அவர்களின் ஆயுதங்கள் இனித் தற்கொலை குண்டுகள் மற்றும் பீரங்கிகள் அல்ல என்றும் பிரசாரங்களும் நீதிமன்ற நடவடிக்கைகளுமே தற்போது அவர்களின் ஆயுதம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும் அவர்களின் குறிக்கோள் அப்படியே உள்ளதென்றும் விடுதலைப் புலிகளின் ஈழக்கொள்கை மாறவில்லை. விடுதலைப் புலிகளின் தற்போதைய ஆயுதம் இதுதான் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆங்கில ஊடகமொன்றுக்கு அவர் வழங்கியுள்ள நேர்காணலில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக் கான உயர்ஸ்தானிகரால யத்தின் ‘இலங்கை பொறுப்புக்கூறல் திட் டம்’ தொடர்பான அறிக்கை குறித்து எழுப் பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே இந்த விடயம் தொடர்பாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாக பயங்கரவாதத்துக்கு எதிராக போரிட்ட போதிலும், இந்த நாட்டில் பெரிய அளவிலான மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லை என்பதே தங்கள் நிலைப்பாடு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2008 இல் எபபிஐஆல் பிரகடனப் படுத்தப்பட்ட உலகின் மிகவும் இரக்க மற்ற பயங்கரவாத அமைப்பிற்கு எதிராக இலங்கை போராடுகிறது என்றும் பிரச்சினைகள் அல்லது மீறல்கள் இருந்தால் இலங்கை உள்ளூர் பொறிமுறைகள் மூலம் அவற்றை நிவர்த்தி செய்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் 16 குற்றவாளிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளார் என்றும் மற்றவர்களை விடுவிப்பது தொடர்பாக ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்க ஜனாதிபதி மற் றொரு குழுவையும் நியமித்தார் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன் பின்னர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 13 பேர் கொண்ட மற்றொரு குழு விடு விக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள் ளார். சட்டத்தையும் ஒழுங்கையும் மேம் படுத்தும் அதே வேளையில், பொறுப்புக் கூறல், காணாமல் போனோர், பாதுகாப்புப் படையினரின் வசமுள்ள காணிகளை விடுவித்தல், நல்லிணக்க முயற்சிகள் மற் றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் போன்ற பிரச்சினைகளை உள்நாட்டில் தாங்கள் பேசி வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tamil News