கொரோனா – இலங்கையில் ஊரடங்கு சட்டம் செப்டம்பர் 6 ஆம் திகதி வரை நீடிப்பு

ஊரடங்கு சட்டம் செப்டம்பர் 6 ஆம் திகதி வரை

ஊரடங்கு சட்டம் செப்டம்பர் 6 ஆம் திகதி வரை: இலங்கையில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊடரங்கு உத்தரவு வரும் மாதம் செப்டம்பர்  06 ஆம் திகதி திங்கட்கிழமை வரை தொடர்ந்து அமுலில் இருக்கும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார்.

முன்னர் அறிவிக்கப்பட்ட 10 நாட்கள் ஊரடங்கு எதிர்வரும் 30-ஆம் திகதி அதிகாலை முடிவுக்கு வரவிருந்த நிலையிலேயே ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீடிக்கப்பட்டுள்ளது.

தேய்நிலையில் தேயிலைத் தொழிற்றுறை – துரைசாமி நடராஜா

நாட்டு மக்கள் தற்போது அமுலில் உள்ள ஊடரங்கு உத்தரவை ஒழுங்காகப் பின்பற்றாமை அவதானிக்கப்படுகிறது. நாட்டில் அமுல் செய்யப்படும் ஊடங்கு பயனுடையதாக அமையும் வகையில் மக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என  சுகாதார அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ilakku-weekly-epaper-144-august-22-2021