235 Views
இராமேஸ்வரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற, 360 கோடி ரூபாய் மதிப்பிலான, ‘கோகைன்’ போதைப் பொருளை, கடற்படை காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, கீழக்கரை நகராட்சி தி.மு.க., கவுன்சிலர், முன்னாள் கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் அருகே மண்டபம் – வேதாளை சாலையில், நேற்று முன்தினம் இரவு, கடற்படை காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது இந்த கடந்தல் நடவடிக்கை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.